தமிழ்நாட்டில் 100 க்கு கீழ் குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

0
78

தமிழகத்தில் தொடக்கம் முதலே நோய் தொற்றுக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்து போராடி வருகிறது. அதோடு பலவிதமான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இதன் காரணமாக, மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட அளவிற்கு தமிழகத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனாலும்கூட இந்த நோய் தொற்றுக்கு பல பிரபலங்கள் பலியாகி சோகத்தை ஏற்படுத்தியது மறுக்க முடியாத உண்மை.தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசும் சற்றே திணறிய தான் போனது.

ஆனாலும் பின்பு மெல்ல, மெல்ல, சுதாரித்துக்கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள், ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பொதுமக்களுக்கு போட்டிருந்தது தமிழக அரசு.அதன் பலனாக தற்சமயம் தமிழகத்தில் வெகுவாக நோய் தொற்று பரவல் குறைந்துவிட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்றைய நோய்த்தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 35,555 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 41 ஆண்கள், 36 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 77 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 28 பேரும், கோயமுத்தூரில் 10 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக வேலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 3 பேரும் உட்பட 17 மாவட்டங்களில் 10க்கும் குறைவாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதோடு கடலூர், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட 19 மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதேபோல அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சிகிச்சையிலிருந்து எல்லோரும் பூரணமாக குணம் பெற்று வீடு திரும்பியிருப்பதால் தற்போது இந்த 2 மாவட்டங்களும் நோய் தொற்று இல்லாத மாவட்டங்களாக உருவாகியிருக்கின்றன.

12 வயதிற்கு உட்பட்ட 18 குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட 14 முதியவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் 6,39,6,874 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு அதில் 34,52073 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரத்தினடிப்படையில், 185 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை.

அதோடு நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து நேற்று 169 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இதுவரையில் 962 பேர் சிகிச்சையிலிருப்பதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.