தொடர்ந்து மனிதர்களை காவு வாங்கும் கொரோனா! தெரித்தோடும் பொதுமக்கள்!

0
60
Corona that continues to buy humans! People in panic!
Corona that continues to buy humans! People in panic!

தொடர்ந்து மனிதர்களை காவு வாங்கும் கொரோனா! தெரித்தோடும் பொதுமக்கள்!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் தொரத்திக்கொண்டு தான் உள்ளது.சென்ற வருடம் மக்கள் 7 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு என்னும் பேரில் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அப்போது பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.அதனையடுத்து மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சில தளர்வுகளுடன் வெளியே செல்ல ஆரம்பித்தனர்.முதலில் விதிமுறைகளை கடைபற்றி வாழ்வாதாரத்தை தொடங்கியவர்கள் நாளடைவில் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்றானது பரவி வருகிறது.இப்போதைய தொற்றானது 2 வது,3 வது அலை என உருமாறி பரவி வருகிறது.அதில் அமெரிக்கா முதல் இடத்திலும்,பிரேசில் இரண்டாம் இடத்திலும்,நான்காம் இடத்திலிருந்த இந்தியா தற்போது மூன்றாம் இடத்திலும் உள்ளது.நாளுக்கு நாள் உயிரிழப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.

தற்போது அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30,917,130  ஆக உள்ளது.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையாக 562,012  ஆக உள்ளது.குணமடைந்தவர்களின் எண்ணிக்கையாக 23,348,504 ஆகா உள்ளது.இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை  11,971,004 ஆக உள்ளது.கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையாக 161,586 ஆக உள்ளது.குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,321,578 ஆக உள்ளது.

பிரேசிலில் கொரோனா தோற்ற பாத்திதவர்களின் எண்ணிக்கை 12,490,362 ஆகா உள்ளது.குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,879,627 ஆக உள்ளது.அதே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310,697 ஆக உள்ளது.ரஷ்யாவில் கொரோனா பாத்திதவர்களின் எண்ணிக்கை 4,510,744 ஆக உள்ளது.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97,404 ஆக உள்ளது.கொரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,130,498 ஆக உள்ளது.அதிக அளவு பாதிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்காவில் தான் உள்ளது.மக்கள் அனைவரும் விதிமுறைகளை கடைப்பிடித்து வாழ வேண்டும்.