குஷியோ குஷி! தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நோய் தொற்று பாதிப்பு!

0
161

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நோய்த் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த விதத்தில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதாவது, தமிழ்நாட்டில் நேற்றைய தினம் புதிதாக 69,482 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது இதில் 473 ஆண்கள், 315 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 788 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில், 51 நாட்களுக்குப் பின்னர் பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 191பேரும், கோயமுத்தூரில் 115 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 86பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் தலா 2 பேரும் அரியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

12 வயதிற்கு உட்பட்ட 127 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 267 பேருக்கும் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் 6,27,91,708 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு அதில் 34,45,717 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில் 1604 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 763 பேர் ஆக்சிஜன் வசதிகொண்ட பிரிவுகளிலும், 265 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதோடு தமிழ்நாட்டில் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 37,981பேர் நோய்த்தொற்றால் பலியாகியிருக்கிறார்கள். இந்த நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து நேற்றைய தினம் 2692 பேர் குணமடைந்திருக்கிறார்கள். அதோடு இந்த நோய் தொற்றுக்கான சிகிச்சையில் 14033பேர் இருக்கிறார்கள்.