ஒன்றாக மது அருந்தும் தம்பதிகளுக்கு நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு: ஆய்வு முடிவு

0
153
#image_title

ஒன்றாக மது அருந்தும் தம்பதிகளுக்கு நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு கிடைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒரே மாதிரியான குடிப்பழக்கத்தைக் கொண்ட தம்பதிகளுக்கு இது ஆரோக்கியமான உறவை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது.

பொதுவாக குடிப்பது ஆரோக்கியமான பழக்கமாக கருதப்படுவதில்லை. மனித உடலில் ஆல்கஹாலின் பல பாதகமான விளைவுகள் உள்ளன. இருப்பினும், ஒன்றாக மது அருந்தும் தம்பதிகள் சிறப்பாக வாழ்கிறார்கள் என்று சமீபத்தில் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. “குடி கூட்டு” கோட்பாட்டின் கண்டுபிடிப்புகள் சிறந்த திருமண விளைவுகளுக்கு ஒன்றாக மது அருந்துவதன் நன்மைகளைக் காட்டுகின்றன.

இந்த ஆய்வானது தம்பதிகளிடையே மது அருந்துவதை  ஊக்குவிக்கவில்லை. மாறாக தம்பதிகளிடையே ஒரே மாதிரியான பழக்கங்களைப் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை மட்டுமே இது எடுத்துக்காட்டுகிறது. ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களையும் பொழுதுபோக்கையும் பகிர்ந்து கொள்வது உறவை வலுப்படுத்துவதாக ஆய்வின் முடிவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக சுமார் 4,500 ஜோடிகளை இந்த ஆராய்ச்சி ஆய்வு செய்துள்ளது. பரஸ்பர குடிப்பழக்கத்தின் நீண்டகால நன்மைகளை இது காட்டுகிறது.

இந்த ஆய்வில், ஒன்றாக மது அருந்தும் பழக்கம் உள்ள தம்பதிகள், மது அருந்தாத தம்பதிகளை விட நீண்ட காலம் வாழ்ந்துள்ளனர். முரண்பாடான குடிப்பழக்கத்தைக் கொண்ட தம்பதிகள் அல்லது இருவரில் ஒருவர் மட்டுமே குடித்தாலும் மாறுபட்ட விளைவையே ஏற்படுத்தும், வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தாது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பேராசிரியரான டாக்டர் கிரா பிர்டிட் இது குறித்து நடத்திய ஆய்வில், இதேபோன்ற மது அருந்துதல் முறைகளைக் கொண்ட தம்பதிகள் சிறந்த உறவைக் கொண்டுள்ளனர் என்று தனது ஆராய்ச்சியில் காட்டினார். இந்த கோட்பாடு “குடி கூட்டு” கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. இதுகுறித்து பேராசிரியர் கூறியதாவது, “இந்த ஆய்வின் நோக்கம், மது அருந்துதல் மற்றும் தம்பதிகள் மீதான இறப்பு விளைவுகளைப் பார்ப்பதாகும்.”

ஆராய்ச்சியின் படி, உங்கள் மனைவியுடன் மது அருந்தும் பழக்கம் ஒரே மாதிரியாக இருந்தால் உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும். இந்தப் பழக்கம் உள்ளவர்கள் சிறந்த இணக்கத்தன்மையைப் பகிர்ந்து கொள்வதோடு அவர்களது உறவுகளில் நல்ல விளைவுகளையும் ஏற்படுத்துவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஒன்றாக குடிப்பதை விரும்பாதவர்களை விட அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் திருப்திகரமாக உள்ளது.

ஆராய்ச்சி மது அருந்துவதை ஊக்குவிப்பது போல் தோன்றலாம் ஆனால் அதிகமாக மது அருந்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்தும் கவனம் செலுத்துகிறது. மிதமிஞ்சிய குடிப்பழக்கத்துடன் ஒப்பிடுகையில், அதிக குடிப்பழக்கம், தம்பதிகளிடையே மோதல் மற்றும் அதிருப்தியை அதிகரிக்கிறது. அதிகப்படியான குடிப்பழக்கத்தில் ஈடுபடும்போது உறவு முறிந்துவிடும். “இந்த ஆய்வின் நோக்கம், உடல்நலம் மற்றும் ஓய்வூதிய ஆய்வில் தம்பதிகளின் மது அருந்துதல் மற்றும் இறப்புக்கான தாக்கங்கள் ஆகியவற்றைப் பார்ப்பதாகும்” என்று அவர் கூறினார்.

டாக்டர் பிர்டிட் மேலும் கூறியதாவது, “கடந்த மூன்று மாதங்களில் இருவரும் ஒரே மாதிரியான பழக்கத்துடன் மது அருந்தியதாகக் குறிப்பிட்ட தம்பதிகள் மற்ற ஜோடிகளை விட அதாவது மதுவருந்தாத ஜோடி அல்லது ஒருவருக்கொருவர் மாறுபட்ட மதுவருந்தும் பழக்கம் கொண்டவர்களை விட நீண்ட காலம் வாழ்ந்ததை நாங்கள் கண்டறிந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.