கிரிக்கெட் வீரர் தோனி வழக்கு! ஜூன் 15ல் விசாரணை நடைபெறும் என்று அறிவிப்பு!!

0
105
#image_title

கிரிக்கெட் வீரர் தோனி வழக்கு! ஜூன் 15ல் விசாரணை நடைபெறும் என்று அறிவிப்பு!

 

முன்னாள் போலிஸ் அதிகாரி மீது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கு ஜூன் 15ம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது சூதாட்டம் நடைபெறுவதாக புகார்கள் எழுந்த நிலையில் போலிஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் விசாரணை நடத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக போலிஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியும் நடந்தது.

 

இதையடுத்து தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மகேந்திர சிங் தோனி அவர்கள் வழக்கு தொடர்ந்தார். தனியார் டிவி நிர்வாகம் மீதும் போலிஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் மீதும் 2014ம் ஆண்டு இந்த வழக்கு தொடரப்பட்டது.

 

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த இந்த வழக்கை இரத்து செய்யக் கோரி முன்னாள் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தோனி தாக்கல் செய்த மனுவில் முன்னாள் அதிகாரி சம்பத்குமார் அவர்கள் தாக்கல் செய்த பதில் மனுவில் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்து உளளார். இது நீதிமன்ற அவமதிப்பு என்பதால் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நீதிமன்றத்தில் முன்னாள் அதிகாரி சம்பத் குமார் ஆஜரானார். இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஜூன் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தோனி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பீ.ஆர் ராமன் அவர்களிடம் நீதிபதிகள் திலகவதி, கோவிந்தராஜன், எம்.சுந்தர் ஆகியோர் கூறியுள்ளனர்.