மாணவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து ஒத்திவைக்கப்பட்ட இளங்கலை தகுதி தேர்வு!

0
76

மத்திய பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வி ஆண்டில் இளங்கலை படிப்புகளில் இணையுவதற்கு 2வது கட்டமாக கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரையில் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் தொழில்நுட்ப பிரச்சனை உண்டானதாக தெரிகிறது.

17 மாநிலங்களில் பல தேர்வு மையங்களில் கடந்த 4ம் தேதி காலை தேர்வு ரத்து செய்யப்பட்டது. 489 மையங்களில் பிற்பகல் சமயத்திலும், தேர்வு முடங்கியது. அதேபோல 5ம் தேதி 50 மையங்களில் தேர்வுகள் முடக்கப்பட்டனர். அதேபோன்று 6ம் தேதி 53 மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இப்படி ரத்து செய்யப்பட்ட தேர்வர்களுக்கு எதிர்வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் மறுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தினங்களில் அதிகமான பண்டிகைகள் வரவிருப்பதால் இந்த மறு தேர்வை தள்ளி வைக்குமாறு மாணவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுத்தொடங்கினர்.

ஆகவே ரத்து செய்யப்பட்டவர்களுக்கான நுழைவுத் தேர்வு வருகின்ற 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்காக புதிதாக நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.