அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் மனு இன்று விசாரணை! பரபரப்பில் அதிமுக வட்டாரம்!

0
61

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம் கொடுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தலைநகர் சென்னையில் கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பதற்கு சென்ற 4ம் தேதி பட்டியலிடப்பட்டது.

அந்த சமயத்தில் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என பரணி செல்வம் தரப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரன்நாத் பண்டாரிடம் மனு வழங்கியது. இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை தலைமை நீதிபதி நிராகரித்தார். ஆகவே இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே விசாரித்து வந்தார்.

மேலும் பன்னீர்செல்வத்தின் இந்த செயல் நீதித்துறையை கலங்கப்படுத்துவதை போலவுள்ளதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார். இதனை தொடர்ந்து தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்ததற்கு பன்னீர்செல்வம் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் நீதிபதியை புதிதாக நியமிக்கும் விதத்தில் தலைமை நீதிபதி முன்னர் வழக்கு விவரங்களை சமர்ப்பிக்குமாறு பதிவுத்துறைக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டிருந்தார்.

அவருடைய பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அதிமுகவின் பொதுக்குழு குறித்த வழக்குகளை விசாரிப்பதற்கு நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்களை புதிதாக நியமனம் செய்தார். இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.