இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை!

0
90
Daughters who struggled to keep the dead mother's body alive! Horror that lasted for three days!
Daughters who struggled to keep the dead mother's body alive! Horror that lasted for three days!

இறந்த தாயின் உடலை வைத்து உயிர்த்தெழுவார் என்று போராட்டம் செய்த மகள்கள்! மூன்று நாட்களாக அரங்கேறிய கொடுமை!

மணப்பாறை அருகே உயிர் இழந்த தாயின் உடலை மூன்று நாட்களாக அவரது மகள்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவதாக கிராம மக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி உடலை மீட்டு சென்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சொக்கம் பட்டியைச் சேர்ந்தவர் மேரி. இவருக்கு வயது ஏழுபத்தி ஐந்து ஆகிறது. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திடீரென உயிரிழந்து விட்டார்.

ஆனால் அவரது மகள்களான ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி இருவரும் அவரது உடலை வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கிறிஸ்டின் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், பிரார்த்தனை செய்தால் தாய் மீண்டும் உயிர்த்தெழுவார் என்று நம்பி அந்த முயற்சி செய்துள்ளனர் போலும். இந்த விஷயம் கேள்விப்பட்ட அப்பகுதி கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கிராம மக்கள் கூறிய தகவலை அடுத்து அந்த இடத்திற்கு சென்ற போலீசாரை வீட்டிற்குள்ளேயே மகள்கள் விடவில்லை.

அதன் பின் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெண் போலீஸ் உதவியுடன் அந்த வீட்டிற்கு சென்றபோது அங்கு எந்தவித அசைவும் இன்றி அந்த மூதாட்டியின் உடல் படுக்கையில் இருந்தது. அதற்கு அவரது மகள்கள் அவர் கோமாவில் இருப்பதாகவும், அவரை வீட்டிலேயே வைத்து நாங்கள் சிகிச்சை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதனை கேட்டு போலீசார் அதிர்ந்து உள்ளனர்.

மேலும் காவல்துறையினர் மீது தாயை கொல்ல பார்ப்பதாக கூறியும் போலீசாரையே மிரட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து வருவாய் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து அதன் பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேரியின் உடலை பரிசோதனை செய்தனர். அப்போது மூதாட்டி மேரி  உயிரோடு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவரது மகள்கள் இருவரும் தாய் உயிருடன் தான் உள்ளார் என்று வாதம் செய்ய ஆரம்பித்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்களிடம் சமாதானம் பேச போலீசார் ஆரம்பித்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் வைத்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கலாம் என மகள்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரோடு இல்லை என்பதை உறுதி செய்தனர்.

அதன் காரணமாக மருத்துவரிடமும் மகள்கள் இருவரும் வாதாடி தாயின் உடலை தங்களிடமே தருமாறு அழுது, புலம்பி உள்ளனர். ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தி உறவினர்களுடன் வந்து காலையில் உடலை எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறி மூதாட்டியின் உடலை பிணவறைக்கு எடுத்துச் சென்றனர். மூதாட்டியின் உடலை எடுத்து வரும் வழியில் கொட்டும் மழையில் போலீசார் 4 மணி நேரம் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் அவர்களது முதற்கட்ட விசாரணையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாகவும் தெரிகிறது. இருந்தபோதிலும், மகள்கள் ஒரு மூட நம்பிக்கையின் காரணமாக தனது தாயாரின் உடலை மூன்று நாட்களாக வைத்து பிரார்த்தனை செய்துள்ளனர். என்ன ஒரு கொடுமை இந்தக் காலத்தில் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையில் கூட இப்படி இருக்கிறார்களே.