வியாபாரிகள் இனிமேல் இதை செய்யக் கூடாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

0
102
#image_title
வியாபாரிகள் இனிமேல் இதை செய்யக் கூடாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
பொருள்களை விற்பனை செய்யும்  வியாபாரிகள் அனைவரும் தங்களிடம் பொருள்களை வாங்க வரும் வாடிக்கையாளரிடம் அலை பேசி (Mobile Phone) எண்களை வாங்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய நுகர்வோர்  விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு சில்லரை வியாபாரிகள் தங்களிடம் அலைபேசி எண்கள் கேட்பதாகவும் அவ்வாறு தர மறுத்தால் சேவைகள் வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் வந்தது. இதையடுத்து மத்திய அரசு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் சில்லரை விற்பனையாளர்கள் விற்பனை ரசீது கொடுப்பதற்கு வாடிக்கையாளர்களின் அலைபேசி எண்கள் கொடுப்பது கட்டாயம் இல்லை. வியாபார பரிமாற்றங்களை செய்து முடிக்க வாடிக்கையாளர்களின்  அலைபேசி எண்களை கேட்கும் இக்கட்டான சூழல் ஏற்படுத்தப்படுகிறது. சில நேரங்களின் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப விடுவதில்லை எனவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பான புகார்களை பரிசீலித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த பிரச்சனை தொடர்பாக அதிரடியாக இந்த உத்தரவை   வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நுகர்வோர்.விவகாரங்கள் துறை செயலர் ரோகித் குமார் சிங் “வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை கொடுக்கவில்லை என்றால் சேவைகள் வழங்கப்படாது பில் போட முடியாது என்று சில்லறை வியாபாரிகள் கூறுகின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளது.  இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திற்கு நியாயம் இல்லாத மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை. இப்படி தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பது நல்லது இல்லை. இதில் அந்தரங்கம் பற்றிய தகவல்களும் அடங்கியுள்ளது என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் “வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் சில்லை வியாபாரத்துறைக்கும், இந்திய தொழில் சம்மேளனத்திற்கும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி சில்லறை வியாபாரிகள் தங்களின் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களையே அல்லது செல்போன் எண்களையோ கேட்டு தருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது” என்று மத்திய நுகர்வோர் விகாரங்கள் துறை செயலர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார்.