இந்தியாவில் உள்ள கட்சிகளின் விவரம்! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

0
115
#image_title
இந்தியாவில் உள்ள கட்சிகளின் விவரம்! புதிய பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
இந்தியாவில் எத்தனை அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் உள்ளது, அங்கீகரிக்கப்பட்ட  மாநிலக்கட்சிகள் உள்ளது, அங்கீகரிக்கப்படாத மாநிலகட்சிகள் உள்ளது என்று அவ்வப்போது மதிப்பாய்வு செய்து பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதைப் போல இந்திய தேர்தல் ஆணையம் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் 6 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 2597 உள்ளன. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு முறையாக செயல்படாத கட்சிகளாக 218 மாநிலக்கட்சிகள் உள்ளன. தமிழ் நாட்டில் 200 கட்சிகள் வேறு மாநிலத்தை சேர்ந்த கட்சிகளாக உள்ளன. தமிழகத்தில் 15 பழைய கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 கட்சிகள்  அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக, தேமுதி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக போன்ற கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளாக உள்ளது.