மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்த லக்னோ!!

0
126
#image_title
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்த லக்னோ!
நேற்று அதாவது மே 16ம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை மேலும் உறுதி செய்தது.
மே 16ம் தேதி லக்னோவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
அதிரடியாக விளையாடிய மார்கஷ் ஸ்டோய்னஸ் ஐபிஎல் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். அவர் 47 பந்துகள் விளையாடி 8 சிக்ஸர்கள் 4 பவுன்டரிகள் அடித்து 89 ரன்கள் சேர்த்தார். கேப்டன் க்ருணால் பாண்டியா 49 ரன்கள் சேர்த்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் பெஹன்ட்ராப் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ்  அணி மேன்கள் களமிறங்கினர். தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிளந்தார். மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் ரோஹித் சர்மா 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரியக்குமார் யாதவ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பிறகு களமிறங்கிய டிம் டேவிட் 32 ரன்கள் அடித்தும் 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி இந்த போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தனது பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.