டிஜிபி:கேரள மாநிலத்திற்கு எச்சரிக்கை!! தமிழக சுங்கச்சாவடிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

0
112

டிஜிபி:கேரள மாநிலத்திற்கு எச்சரிக்கை!! தமிழக சுங்கச்சாவடிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

போக்குவரத்து துறையில் பல்வேறு முன்னேற்றங்களை அமல்படுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருந்த நிலையில் அனைத்து சுங்க சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் என்றும் போக்குவரத்து விதிமுறைகளை காண அனைத்து இடங்களிலும் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் சமீப காலமாக கேரளா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ கழிவுகள் பலவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து கொட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் இதனை தடுக்க சோதனை சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு பணி நடந்து வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

எனவே இனிவரும் நாட்களில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரக்கூடிய மருத்துவ கழிவுகளை கொட்டுவதை தடுக்க தென்காசி பொள்ளாச்சி கன்னியாகுமரி என அனைத்து சுங்கச்சாவடிகளையும் கண்காணித்து வருவதாகவும் அவ்வாறு கொண்டு வந்து கொட்டுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு முதல்வரின் ஆலோசனைப்படி போக்குவரத்து துறையில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமரா மூலம் கிட்டத்தட்ட 45 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.