ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர் விவகாரம் – உச்ச நீதி மன்றத்தில் திமுக திடீர் மனு!

0
85

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து முதல்வராக பதவியேற்றார் ஓபிஎஸ். அவருக்கும் சசிகலா மற்றும் தினகரனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட அவரை வற்புறுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக கூறி தர்மயுத்தம் அறிவித்தார்.

இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ் ஆதரவு நிலைபாடு எடுக்க, பிற சட்டமன்ற உறுப்பினர்கள் அணி தாவலை தடுக்கும் வகையில் கூவத்தூர் விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது சசிகலா முதல்வராவதற்க்கான வேலைகளில் மும்முரமாக, ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் உச்சநீத் மன்றம் இறுதி தீர்ப்பை அளித்தது. அதில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதாவையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சசிகலா உள்ளிட அவரது உறவினர்களுக்கும் சிறை தண்டனையளித்து தீர்ப்பளித்தது.

இதனால் சசிகலாவின் முதல்வர் திட்டம் தகர்ந்து போக தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் பழனிசாமியை முதல்வராக்க திட்டமிட்டனர். இதனையடுத்து பழனிச்சாமி ஆளுனரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அளித்தார். அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.

இதனால் சட்டமன்றம் கூட்டப்பட்டு நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அதிமுகவை சேர்ந்தாலும் சசிகலா தரப்பு மீது அதிருப்தியுடன் இருந்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி கொரடாவின் உத்தரவை மீறி எதிராக வாக்களித்தனர். ஆனால் போதில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்து கொண்டார். அதன் பின்னர் பாஜக தலையிட்டு ஓபிஎஸ் மற்றும் பழனிசாமியை சேர்ந்து வைத்தனர்.

ஆனாலும் சட்டமன்றத்தில் கொரடாவின் உத்தரவை எதிர்த்து வாக்களித்தது 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலைவலியில் முடிந்தது. இந்த விவகாரத்தை எதிர்கட்சியான திமுக நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றது.

அந்த வழக்கில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யக்கோரி அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இதுவரையிலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் மணிப்பூர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்தான் கடந்த பிப்ரவரி 14ம் தேதி, அரசுக்கு எதிராக வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அரசியல் சாசனப்பிரிவு 14ன் படி சபாநாயகர் தனது கடைமையைச் செய்யவில்லை.

தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அணிமாறிய ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களைச் சட்டசபைக்குள் செல்ல மணிப்பூர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தற்போது இந்த வழக்கை மேற்கோள் காட்டி தகுதி நீக்கம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சபாநாயகர் இதுவரையிலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை இது சட்டத்திற்குப் புறம்பானது என கூறி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்க செய்துள்ளது. மணிப்பூர் வழக்கை போல் 11 எம்.எல்.ஏ.க்களை வழக்கிலும் உச்சநீதிமன்றம் இடைக கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K