அந்தத் திட்டம் நாங்கள் கொண்டு வந்தது அவர்கள் பொய் சொல்கிறார்கள்! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி பேட்டி!

0
78

சென்னை சைதாப்பேட்டை பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பதிவு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆரம்பித்து வைத்தார். இதனையடுத்து 12 லட்சம் மதிப்பீட்டில் 8 பேருக்கு செயற்கை கால் வழங்கியிருக்கிறார். தொடர்ந்து உரையாற்றிய சுப்பிரமணியன் பூஸ்டர் தவணை தடுப்பூசி ஆக கோவக்சீன் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார திட்ட இயக்குனர் மருத்துவர் உமா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மருத்துவர் மணிஷ் சிம்ரன் ஜித் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது, இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது, சென்ற வருடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வருமான உச்சவரம்பு 72,000 இருந்ததை கடந்த மாதம் 1.20 லட்சமாக அதிகரித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இந்த ஆணையின் அடிப்படையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் இருந்தால் 5 லட்சம் வரையில் பயன் பெறலாம் என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து 382.5 கோடி ரூபாய் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு இருக்கின்ற நோயாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சென்னையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் தடுப்பூசி போட தேவையான கட்டமைப்பு வசதிகள் இருக்கிறது என கூறியிருக்கிறார்

தற்சமயம் தமிழ்நாட்டில் 4 லட்சம் பேரும் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் ஆனால் இதுவரையில் 40 ஆயிரம் பேர் மட்டுமே போட்டு இருக்கிறார்கள். ஆகவே பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும், அதேபோல நாட்டிலேயே தமிழகத்தில்தான் 73% 15 வயது முதல் 18 வயது வரையில் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். லட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு முதன்மை மாநிலம் என்ற நிலையை தமிழகம் எட்டி இருக்கிறது.

தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி ஆரம்பிப்பதற்காக கடந்த 2011ம் வருடம் பிப்ரவரி மாதத்திலேயே திமுக ஆட்சியில் இருக்கும்போதே அரசாணை வெளியிடப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று தெரிவிக்கிறார்கள், உண்மையிலேயே அதிமுகவால் தான் மருத்துவக்கல்லூரிகள் வருவது தாமதமாகிக் கொண்டே வந்தது. அதிமுக அவர்கள் மருத்துவக்கல்லூரி அமைய இருக்கிறது என்று மார்தட்டிக் கொள்வதில் நியாயமில்லை. தமிழ்நாட்டிற்கு இன்னும் ஐந்து மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தேவை இருக்கிறது என்று மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம் என கூறியிருக்கிறார்.