உங்களுக்கு கொலஸ்ட்ரால் உள்ளதா? அப்போ மாரடைப்பு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இதோ கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான எளிய பானம்!

0
93

உங்களுக்கு கொலஸ்ட்ரால் உள்ளதா? அப்போ மாரடைப்பு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இதோ கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான எளிய பானம்!

கொலஸ்ட்ரால் என்பது நம் உடலின் செல்களில் காணப்படும் மெழுகு போன்ற பொருள். இது நமது கல்லீரலால் தயாரிக்கப்படுகிறது. மற்றும் இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற பல உணவுப் பொருட்களிலும் காணப்படுகிறது

அதிக கொலஸ்ட்ரால் என்பது ஒரு தீவிர பிரச்சினையாகும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் பொழுது தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.  கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கொலஸ்ட்ரால் உயிரணு சவ்வு, விட்டமின் டி, சில ஹார்மோன்கள் உருவாவதற்கும் கொலஸ்ட்ரால் அவசியமாகிறது. இருப்பினும் சில நேரங்களில் நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஒரு எளிமையான பானத்தை பற்றி இங்கு காண்போம்.

இந்த பானத்தை இரண்டு வாரங்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலே உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும். அது மட்டும் இல்லாமல் அதிக உடல் எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சளி இருமலால் அவதிப்படுபவர்கள், இவர்களும் இதைக் குடித்தால் நல்லதொரு பலனை பெறலாம்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். அதில் சிறிய துண்டு இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாகி போடவும். இஞ்சியானது கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு மட்டுமில்லாமல் அதில் உள்ள ஜிஞ்சரால் ஒரு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

அடுத்து நான்கு பல் பூண்டை தோல் நீக்கி கல்லில் வைத்து தட்டி அதில் சேர்க்கவும். பூண்டானது கெட்ட கொழுப்பை குறைப்பதோடு மட்டுமில்லாமல் நாம் உண்ட உணவு செரிக்க உதவுகிறது. இது ஒரு ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் சிறிது ஆறவிட்டு ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும். இதில் ஒரு அரை மூடி எலுமிச்சை சாறு விடவும். எலுமிச்சை சாற்றில் உள்ள விட்டமின் சி கெட்ட கொழுப்பை குறைப்பதோடு உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. அடுத்து ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். தேன் நமது உடலில் கொலஸ்ட்ரால் படியாமல் தடுக்க உதவுகிறது. இப்பொழுது பானம் தயார்.

இந்தப் பானத்தை தினமும் காலை உணவுக்கு முன் இரண்டு வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நம் உடலில் கொலஸ்ட்ரால் எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.