பவுடர் வியர்வைக்கு தீர்வளிக்குமா!! போடுவதற்கு முன் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!! 

0
170
#image_title

பவுடர் வியர்வைக்கு தீர்வளிக்குமா!! போடுவதற்கு முன் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!!

20 நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றால் மலையில் நனைந்தது போல் வியர்வை உண்டாகும். அந்த வியர்வையினால் அணிந்திருக்கும் ஆடையை நினைவும் அளவுக்கு வேர்வை வெளிவரும். வெயிலில் உக்கரம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தாங்கிக் கொள்ள முடியாமல் அனைவரும் தவிர்த்து வருகின்றன ஒரு புறம் வெயில் என்றாலும் மறுபுறம் வியர்குருகள், அம்மை நோய், நீர்க்கட்டி, உடல் அரிப்பு மற்றும் மலச்சிக்கல் எனப்படும் பல நோய்கள் படையெடுத்து வருகிறது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியர்க்குரு பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.

மேலும் வியர்க்குரு யாருக்கெல்லாம் வரும் இதற்கு என்ன தீர்வு வியர்குருகள் உடல் வெப்பம் அதிகமாகும் போது வியர்வை சுரப்பிகள் தேங்கும் உப்புக்கள் கழிவுகளை வியர்வையாக வெளியேற்றுகிறது. வியர்வையினால் சிறு கட்டிகள் வருவது வியர்குருகள் என்கிறார்கள். இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அரிப்பு தேமல் பல நோய்கள் ஏற்படுகிறது.

இந்த காலகட்டத்தில் அதற்கான மருந்துகள் பவுடர்கள் நிறைய வந்துள்ளது. அதனை பயன்படுத்துவது நல்லதா கெட்டதா என்பதை பார்ப்போம். பவுடர் போடுவதால் வியர்குருகள் அதிகமாகி சீல் பிடித்து காய்ச்சலில் கொண்டு போய்விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பவுடர்களை அதிக அளவில் பயன்படுத்தாமல் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பவுடர்கள் அரிப்பை மட்டும் நீக்குகிறது மற்றும் வியர்குருகளை அதிகப்படுத்துகிறது.

இதற்கான இயற்கை முறையில் வியர்குருகளை தவிர்க்க கற்றாழை பயன்படுத்தலாம். ஆடை அணியும்போது டைட்டாக இருக்கும் துணியை அணியாமல் காட்டன் போன்ற துணிகளை அணிவதால் வியர்குருகள் வராமல் தடுக்கலாம்.

வியர்குருகள் அதிகமாகி அதிகம் பரவி சீல்பிடித்தது என்றால் மருத்துவரை உடனடியாக பார்க்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் தண்ணீரை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் வேர்க்குரு வருவதை கட்டுப்படுத்தலாம். மேலும் இரண்டு முறை குளித்து வந்தாலும் வியர்குருகளை வராமல் தடுக்கலாம்.

author avatar
Jeevitha