உட்கார்ந்த நிலையில் உணவருந்த வேண்டும் என்பது ஏன்..?

0
78

இன்றைய அவசர சூழலில் உணவருந்தும் கலாச்சாரத்தை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. தற்போதெல்லாம் நடந்து கொண்டும், நின்று கொண்டும் தான் அதிகம் பேர் உணவருந்துகின்றனர். குழந்தைகளுக்கும் அவ்வாறே உண்ண பழக்குகின்றனர்.

சானம் பூசிய தரையில் பனையோலை தடுக்கில் சப்பணமிட்டு உட்கார்ந்து முன்பக்க பார்வையுடன் உணவருந்த வேண்டும் என்பது தொன்று தொட்டுள்ள பழக்கம். ஷுஸ்களை கூட கழற்றாமல், கால் மேல் கால் வைத்து டைனிங் டேபிளில் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு உணவு அருந்துவது தற்போதைய பழக்கமாகிவிட்டது. ஆனால், இதைவிட நம் முன்னோர்களின் முறையே அழகுள்ளது. மேலும், அவ்வாறு அமர்ந்து உண்பதனால் நம் உடலுக்கும் சில நன்மைகள் உள்ளதாக நம் முன்னோர்கள் கருதினர். ஆனால், இன்றைய நவீன உலகில் வாழும் மக்கள் இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

நாம் உணவருந்தும் போது உடலின் மூட்டுகளில் அசைவு ஏற்படுகின்றது என்று இன்றைய சாஸ்திரம் சொல்கிறது. இந்த அசைவு மூட்டுகளுக்கு அதிக பாரத்தை உண்டாக்கும். அமர்ந்த நிலையில் உணவருந்தினால் இந்த பாரத்தை குறைக்க இயலும். மேலும், நின்றுகொண்டு உணவருந்தினால் அதிக அளவில் உணவருந்தவும் வாய்ப்புண்டு. அளவுக்கு அதிகமாக உண்ணுவதும் நம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அறிவோம். வயிறு நிரம்ப உண்ணாதவர்கள் பல நோய்களில் இருந்து விலகி இருப்பார்கள் என்று மருத்துவத்துறை பல வழிகளில் அறிவித்துள்ளது.

இதனால்தான், நாம் எப்பொழுதும் உணவருந்தும் போது தரையில் சப்பணமிட்டு உணவு உண்ண வேண்டும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.

author avatar
Parthipan K