அதிமுகவின் பொது செயலாளராக தேர்வு செய்யப்படும் எடப்பாடி பழனிச்சாமி! பொதுக்குழுக்கான தீர்மானங்கள் வெளியீடு!

0
99

அதிமுகவின் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கடந்த சில தினங்களாக பழனிச்சாமி தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள். அதனை உறுதி செய்யும் விதமாக வருகின்ற 11ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற பொதுக்குழுவில் மேற்கொள்ளவிருக்கின்ற தீர்மானங்கள் தொடர்பான விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்ற கடிதத்தில் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் விவாதிக்கப்படுவதாகவும் அதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும், அதுவரையில் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது 2021 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடந்த அதிமுக செயற்குழுவில் இயற்றப்பட்ட சட்டதிட்ட திருத்தங்கள் ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததன் காரணமாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்டோர் செயல்பட முடியாமல் போனது.

பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியைச் சார்ந்தவர்கள் உடனடியாக பொதுக்குழுவை கூட்டுமாறு விண்ணப்பத்தினடிப்படையில், வேண்டுகோள் விடுத்தனர். ஆகவே எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் அதிமுகவின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூட்டப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் தீர்மானங்கள்.

1-அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்

2-அறிஞர் அண்ணா ஜெயலலிதா வெளியிட்டோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்

3-ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பொறுப்பு தொடர்பாக விவாதித்து முடிவெடுப்பது தொடர்பாக.

4-இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்படுத்துவது தொடர்பாக விவாதித்து முடிவெடுப்பது தொடர்பாக.

5-இடைக்கால பொதுச் செயலாளரை நடைபெறவிருக்கின்ற பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல் தொடர்பாக.

6-பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட வேண்டுதல் தொடர்பாக.

7-அதிமுகவின் தற்போதைய நிலை தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க வேண்டுதல் தொடர்பாக.

8-எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதாவின் ஆட்சியின் சாதனைகளும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் செய்யப்பட்ட வரலாற்று வெற்றிகளும்.

9-அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசுக்கு கண்டனம்.

10-விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு தவறிய மக்கள் வருவதாக திமுக அரசுக்கு கண்டனம்.

11-சட்டம் ஒழுங்கை பேணி காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்

12-மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்துதல்.

13-இலங்கைத் தமிழர் நலன் காக்க தவறிய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துதல்.

14-அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டுவருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசுக்கு வலியுறுத்துதல்.

15 -நெசவாளிகளின் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துதல்.

16 -தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அதிமுகவினரின் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல்.