இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! ரூ.35000/- ஊதியம்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

0
32
#image_title

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! ரூ.35000/- ஊதியம்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR – Indian Agricultural Research Institute) காலியாக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி Junior Research Fellow மற்றும் Skilled Worker பணிகளுக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் இன்று அதாவது செப்டம்பர் 13 வரை ஆன்லைன் அல்லது தபால் வழியில் வரவேற்கப்பட இருக்கின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR – Indian Agricultural Research Institute)

பதவி:

*Junior Research Fellow

*Skilled Worker

காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 02 காலியிடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Junior Research Fellow பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் M.Tech,M.Sc,Ph.D உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல் Skilled Worker [பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10 அல்லது 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: Junior Research Fellow மற்றும் Skilled Worker பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35க்குள் இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:

Junior Research Fellow பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

Skilled Worker பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி (மின்னஞ்சல்)

Junior Research Fellow மற்றும் Skilled Worker பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் www.iari.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் அதாவது மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள்: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்று அதாவது செப்டம்பர் 13 கடைசி நாள் ஆகும்.