அவரைப் பற்றி எதுவும் பேசக்கூடாது! அதிமுகவினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமி!

0
107

அதிமுகவில் அதிகார மோதல் உண்டாகி ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு பிரிவுகளாக பிரிந்து இருக்கின்ற நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தில் அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், பன்னீர்செல்வம் தொடர்பாகவும் எதுவும் பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் உண்டான அதிகார மோதல் சுமார் ஐந்து வருடங்கள் கடந்த பிறகும் முடிவுக்கு வராத நிலை தான் இருக்கிறது. கண்ணாடியில் விழுந்த விரிசல் போல இருந்த ஓபிஎஸ் இபிஎஸ் வெளியிட்டவரின் முதல் வெட்ட வெளிச்சமாக தற்போது மாறியுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவு நிர்வாகிகளை ஒன்றன்பின் ஒன்றாக கட்சியிலிருந்து நீக்கி வருகிறார்.

இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் விரக்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதற்கு நடுவே பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி பொது இடங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வருகின்ற 17ஆம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் அல்லது நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பங்கேற்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் என்று அடுத்தடுத்து அமரும் வகையில் இடமானது ஒதுக்கப்பட்டிருக்கும். இப்படியான நிலையில் பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை அதிமுகவிலிருந்து நீக்கியதாகவும், அவர்களை அதிமுக உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று சபாநாயகருக்கு பன்னீர்செல்வம் தரப்பு கடிதம் எழுதியது.

ஆகவே வருகின்ற 17ஆம் தேதி ஆரம்பிக்க உள்ள சட்டமன்ற கூட்டத்தில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த விதத்தில் இருக்குகள் ஒதுக்கப்படவுள்ளது தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சபாநாயகர் இருவரும் முன்னாள் முதலமைச்சர்கள், சட்டசபையில் கண்ணியத்துடன் நடந்து கொள்வார்கள் என்று தெரிவித்திருந்தார். அதோடு எந்த இடத்தில் இருக்கை ஒதுக்குவது என்பது சபாநாயகரின் அதிகாரத்திற்குட்பட்டது என்று கூறியுள்ளார்.

ஆகவே அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்றைய தினம் நடந்தது இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொன்னூரா ஆண்டை கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அதோடு அதிமுக உற்பத்தி பிரச்சனை குறித்தும், அடுத்த கட்டமாக நீதிமன்ற வழக்குகளை கையாள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதோடு வருகின்ற 17ஆம் தேதி சட்டமன்ற கூட்டம் தொடங்க உள்ளதால் பன்னீர்செல்வம் தொடர்பாகவோ அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவோ சட்டமன்ற உறுப்பினர்கள் எதுவும் பேசக்கூடாது எனவும் தொகுதி பிரச்சனை குறித்தும் திமுக அரசின் அராஜகங்கள் தொடர்பாக மட்டுமே பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.