ஈரோடு இடைத்தேர்தல்.. இபிஎஸ் ஓபிஎஸ் போட்டியில் நொறுங்கும் இரட்டை இலை!! தேர்தல் ஆணையம் கையில் அதிமுக வின் குடுமி!! 

0
103
erode-by-election-aiadmks-kutumi-is-in-the-hands-of-the-election-commission
erode-by-election-aiadmks-kutumi-is-in-the-hands-of-the-election-commission

ஈரோடு இடைத்தேர்தல்.. இபிஎஸ் ஓபிஎஸ் போட்டியில் நொறுங்கும் இரட்டை இலை!! தேர்தல் ஆணையம் கையில் அதிமுக வின் குடுமி!!

ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதை யொட்டி அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளரை அறிவித்து மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக மட்டும் ஏதோ நிலை தடுமாறி படியே இருந்து வருகிறது.

அதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஒற்றை தலைமை என்பதுதான். மேலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் ஒன்றிணைந்து கையெழுத்திட்டால் மட்டுமே வேட்பாளரை அறிவிக்க முடியும் என்ற விதிமுறையால் அதிமுக சற்று தடுமாறி வருகிறது.

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உயர் நீதிமன்றத்தில் தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் ஆக தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இடையீட்டு மனு அளித்திருக்கும் பட்சத்தில்,இது குறித்து பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் மூன்று நாள் கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் மற்றும் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு வழங்கியுள்ளது.

மூன்று நாட்களுக்கு பிறகு தான் அதிமுக எந்த சூழலில் இருக்கும் என்பதை கணிக்க முடியும், அதுவரையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு காரணிகளாக தான் இருக்கும்.தற்பொழுது ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து தங்களது வாக்குகளை சேகரித்து வரும் பட்சத்தில் இவர்களை எதிர்க்கும் வகையில் அதிமுக ஒரு வேட்பாளரை அறிமுகம் செய்ய வேண்டும்.

அதேபோல திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் ஈரோட்டில் அனைவருக்கும் பழகிய முகம் என்பதால் பெருமளவில் வாக்கு சேகரிக்க சிரமப்பட தேவையில்லை.

எனவே அதிமுக அதற்கு இணையான வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே சமாளிக்க முடியும். அந்த வரிசையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே வி இராமலிங்கம், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் நந்தகுமார், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு உள்ளிட்டவர்கள் எடப்பாடி லிஸ்டில் உள்ளதாக கூறுகின்றனர்.

தற்பொழுதே இரட்டை இலை பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து இவர்களில் யாரேனும் நின்று,சமூக வலைத்தளம் எனத் தொடங்கி மக்களின் நேரடி பிரச்சாரம் வரை இவர்கள் முகத்தை பதிவு செய்தால் மட்டுமே திமுகவை எதிர் கொள்ள முடியும்.

ஆனால் நாங்கள் இறுதியில் கூட தேர்தலை சந்திப்போம் என அதிமுக கூறுவது சப்பக்கட்டு கட்டுவது போல தான் உள்ளது. அதேபோல தற்பொழுது எடப்பாடியின் லிஸ்டில் இருக்கும் நபர்கள் யாரும் தானாக முன்வந்து இந்த தேர்தலுக்கு செலவு செய்ய யோசிப்பதாக கூறுகின்றனர்.

அதற்கு மாறாக கட்சி சார்பிலே செலவு செய்யலாம் என தெரிவித்து அதற்கான பட்ஜெட்டை தருமாறு எடப்பாடி கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எடப்பாடியின் முவ் போல தான் பன்னீர் செல்வத்தின் அடுத்த நடவடிக்கையும் இருக்கும் என்றும் அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.தேர்தல் ஆணையம் கூறப்போகும் முடுவு தான் இந்த இடைத்ததேர்தலில் அதிமுகவின் அடுத்த நடவடிக்கையாக இருக்கும்.