கனமழையால் தமிழகம் முழுவதும் தத்தலித்தாலும் இவர்களுக்கு மட்டும் தினம் தோறும் கொண்டாட்டம்தான்!

0
67

தமிழ்நாட்டில் ஏற்கனவே நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததை தொடர்ந்து கடந்த இரண்டு வருட காலமாகவே பள்ளிகள், கல்லூரிகள், என்று எதுவும் செயல்படாமல் இருந்த காரணத்தால், கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் மெல்ல,மெல்ல செயல்படத் தொடங்கினர்.

இந்த சூழ்நிலையில், தற்போது பருவமழை தொடங்கி இருப்பதால் தமிழகம் முழுவதும் பரவலாகவும், ஒருசில பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் ஆறு, குளம், உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் தண்ணீர் நிரம்பி வழிகின்றது, அதோடு இடைவிடாமல் மழை பெய்து வருவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதோடு தலைநகர் சென்னையை பற்றி சொல்லவே வேண்டாம் சென்னை வாசிகளை பொறுத்தவரையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு நிலை மீண்டும் வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஆளும் கட்சியின் தரப்பிலோ எக்காரணம் கொண்டும் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு நிலை மீண்டும் ஏற்படவே ஏற்படாது என்று அடித்துக் கூறுகிறார்கள். ஆனால் பொதுமக்களோ தண்ணீரில் மிதந்து வருவதால் வேதனைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பெய்துவரும் மழையின் காரணமாக, 13 மாவட்ட பள்ளிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. கனமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கன்னியாகுமரி, உள்ளிட்ட 8 மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

கனமழையின் காரணமாக, கடலூர், விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சார்பாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.