தர்பார் படத்திற்கான தோல்வி!! இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் யின் வெளிப்படை பேச்சு!!

0
157
#image_title

தர்பார் படத்திற்கான தோல்வி!! இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் யின் வெளிப்படை பேச்சு!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி,நயன்தாரா,நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு போன்ற திரைப்பிரபலங்கள் நடித்து வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்யவில்லை.இதனை தொடர்ந்து தர்பார் படத்தின் தோல்விக்கான காரணத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தர்பார். துப்பாக்கி,கத்தி மற்றும் 7 ம் அறிவு போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.ஆகையால் ரஜினி ரசிகர்களிடையே தர்பார் படத்திர்க்கான பெரும் எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடதக்கது.

ரஜினி போன்ற திரைப்பிரபலங்களை இயக்கும் போது அவர்களுக்கான கதையும் திரைக்கதையும் சரியாக அமைவதில்லை. மேலும் தர்பார் படத்தில் பல நல்ல காட்சிகளை வைத்திருந்தாலும் படத்தின் திரைக்கதையை வலுவாக அமைக்கவில்லை இதுவே படத்தின் தோல்விக்கான காரணமாக கருதப்படுகிறது.

ஆனாலும் ரஜினி இந்த படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.மும்பையில் போலீஸ் அதிகாரியாக ஆதித்யா அருணாச்சலமாக களமிறங்கும் ரஜினி, போதை தடுப்பு மற்றும் பெண்கடத்தல் தடுப்பில் ஈடுபட, அதன் காரணமாக அவரது மகள் கொல்லப்பட என இந்தப் படம் வழக்கமான கதையுடன்தான் இருந்தது.ஆனால் தன்னுடைய நடிப்பில் படத்தில் சிறப்பாக தோற்றமளிப்பார்.

தற்போது இந்தப் படத்தின் தோல்வி குறித்து பேட்டியொன்றில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். பிப்ரவரியில் இந்தப் படத்தின் பேச்சுவார்த்தைகள் துவங்கப்பட்டன, ரஜினியின் அரசியல் பயணம் காரணமாக படத்தை மார்ச் மாதத்திலேயே துவங்கவேண்டிய கட்டாயம் இருந்ததாகவும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டிய தேவை இருந்ததாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி காரணமாக சரியான திட்டமில்லாமல் படத்தை இயக்கவேண்டிய கட்டாயம் இருந்ததாகவும் மேலும் சரியான அவகாசம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.இது தன்னுடைய தவறான முடிவு என்பது பிறகுதான் புரிந்தது என்றும் கூறியுள்ளார்.

தான் ரஜினியின் தீவிர ரசிகன் என்பதால், நெருக்கடியான சூழலில் இருந்தாலும் அவரது படத்தை இழக்க விரும்பவில்லை என்பதால்தான் படத்தை ஒப்புக் கொண்டதாக கூறியுள்ளார்.

author avatar
CineDesk