மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! 

0
120

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விதைகளை பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது விவசாயிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விதைகளை பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு 2020 முதல் 2023 ஆண்டுகள் கால கட்டத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரண்டு வகை கத்தரிக்காய் விதைகளை இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கர்நாடகா ,பீகார் ,மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா ,மேற்கு வங்காளம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் பி.டி .கத்தரிக்காய்களை பரிசோதனை செய்ய மத்திய அரசும் ,மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழுவும் அனுமதியளித்துள்ளது.

இந்த பி.டி.கத்திரிக்காயை மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை ஐசிஏஆர் என்ற வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும், என்ஆர்சிபிவி என்ற தாவரவியல் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கிய இந்த பிடி கத்தரிக்காய்க்கு ஜனத் மற்றும் பிஎஸ்எஸ்-793 என்று பெயரிடப்பட்டுள்ளது. இருப்பினும் மாநில அரசின் உரிய அனுமதி பெற்று பிடி கத்தரிக்காய் விதைகள் தற்போது களப்பரிசோதனை செய்ய மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு அனுப்பியதாக தெரிவத்தது.

பரிசோதனையில் கிடைக்கும் தகவல்கள் , ஆய்வுகளின் முடிவு குறித்து மாநில பல்லுயிர் வாரியங்கள் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து பல்லுயிர் மேலாண்மை குழுயுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் குழுவின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்கைகளை 10 ஆண்டுகளுக்கு பின்பு, வணிக ரீதியாக உற்பத்தி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பி.டி.கத்தரிக்காய் விதைகளை மீண்டும் களப்பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதியளிப்பது விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

author avatar
Parthipan K