வீட்டை போல் வானத்திலும் சண்டையாம்! புகைப்படம் பார்த்தீர்களா? ஒரு அதிசயம் தான்!

0
84
Fight in the sky like at home! Did you see the photo? That's a miracle!
Fight in the sky like at home! Did you see the photo? That's a miracle!

வீட்டை போல் வானத்திலும் சண்டையாம்! புகைப்படம் பார்த்தீர்களா? ஒரு அதிசயம் தான்!

நம் வீட்டில் சகோதர, சகோதரிகள் இருப்பவர்களுக்கு தெரியும். எதற்காவது ஒன்று, அல்லது  நாம் சும்மா விளையாட்டுக்கு சண்டை போடுவோம். அது நிஜ சண்டையாக இருந்தாலும் சிறிது நேரம் நீடிக்கும். பின்பு சகஜமாக நாம் பழகுவோம். இதைப்போல் கேலக்ஸிகளும் சண்டை போடுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அதை ஹப்பிள் என்ற ஒரு தொலைநோக்கி அழகாக படம் பிடித்து நமக்கு புகைப்படங்களை அனுப்பியுள்ளது. பால்வெளி அண்டத்தில் உள்ள விண்வெளியில் பல கேலக்ஸிகள் உள்ளது. அந்த கேலக்ஸிகளுக்குள் மூன்று கேலக்ஸிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்வதை ஹப்பிள் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக நாசா தெரிவித்து உள்ளது. அந்த தொலைநோக்கி நாசாவின் உடையது ஆகும்.

அந்த ஹப்பிள் தொலைநோக்கி மூன்று கேலக்ஸிகளும் ஒன்றுக்கொன்று சண்டையிடுவது மிகத் தெளிவாக புகைப்படம் எடுத்துள்ளது. பெரிய விண்மீன் கூட்டங்களை உள்ள ஒரு குழுவை தான் நாம் கேலக்ஸி என்று கூறுவோம். விண்வெளியில் இது போன்ற பல ஆயிரக்கணக்கான கேலக்ஸிகள் இருக்கின்றன என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

கேலக்ஸிகள் கூட்டங்களாக இருக்கின்றன என்று கூட சொல்வார்கள். அவற்றுக்கு இடையில் சண்டை எழுவதற்கு காரணம் பொதுவான ஒன்று ஈர்ப்பு விசை தான். நாம் எப்படி சிறுபிள்ளை வயதில் பிஸ்கட் மற்றும் பொம்மைகளுக்கு சண்டை போட்டோம். அதுபோல் கேலக்ஸிகளுக்குள் ஈர்ப்புவிசைக்காக அப்போது இவ்வாறு சண்டை வருமாம்.

அப்போது நட்சத்திரங்கள், கோள்கள், சிறுகோள்கள் உள்ளிட்டவைகளை சகோதர கேலக்ஸி  மீது ஆதிக்கம் செலுத்தி இழுத்துக் கொள்ளுமாம். இரண்டு கேலக்ஸிகளும் ஒரே அளவிலான ஈர்ப்புவிசை கொண்டிருந்தால் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளவும் செய்யுமாம். நம் வீட்டில் நடக்கும் அல்லவா? பலம் வாய்ந்தவர்கள் இரண்டுபேர் சண்டை போடும்போது, சண்டை பெரிதாகும். அது போல தான்.

அப்படியான அரிய நிகழ்வு அண்மையில் நடைபெற்றுள்ளது. இதை ஜூலை 30ஆம் தேதி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் மூன்று கேலக்ஸிகளும் arp195 எனப்படும் சகோதர கேலக்ஸிகள் ஆகுமாம். விசித்திரமாக விண்மீன்களை கொண்டிருக்கும் கேலக்ஸி கூட்டத்திற்கு ஏற்ப பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்தக் கூட்டங்கள் பெக்யூலியர் காலக்ஸிகள் என்று அறிவியலாளர்களால் அழைக்கப்படுகின்றது. கலிபோர்னியாவில் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பணியாற்றிய வானியலாளர் ஹால்டன் ஆர்பால் 1966 ஆம் ஆண்டில் இந்த கேலக்ஸி பட்டியலை தயாரித்துள்ளார். விசித்திரமான விண்மீன் திரளை கொண்டிருக்கும் கேலக்ஸிகள் தன்னுடைய ஈர்ப்பு விசையால் மற்றொரு கேலக்ஸியை தொடர்பு கொள்வது என்றும் கூறியிருந்தார்.

மோதிக் கொள்ளக் கூடிய கேலக்ஸிகள் எனவும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. டிவார்ப் வகைகளும் உள்ளன. அந்த விண்மீன் கூட்டத்தில் போதுமான ஈர்ப்பு மற்றும் நிறை இருக்காது என்பதால் ஈர்ப்பு விசை அதிகம் உள்ள கேலக்ஸிகளுடன் மோதும் போது அவை அவற்றுடன் ஐக்கியமாகி கொள்கின்றன.

ரேடியோ கேலக்ஸிகள் என்ற ஒரு கூட்டமும் உள்ளது. அந்த கேலக்ஸி கூட்டங்களின் மைய புள்ளிகள் பிளாக் ஹோலில் இருந்து அயோனைஸ்டு கற்றைகள் அதிவேகத்தில் அதிகமாக  வெளியாகும். விண்வெளியில் அதிசயிக்க வைக்கும் பிரம்மாண்டமான மற்றும் வியக்க வைக்கும் புகைப்படங்கள் நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி தொடர்ந்து வீரியத்துடன் எடுத்து அனுப்பி வருகிறது. இந்த தொலைநோக்கியின் வியக்க வைக்கும் பணியில் மூன்று கேலக்ஸிகளும் மோதிக் கொள்ளும் அரிய புகைப்படமும் இதன் மூலம் நமக்கு கிடைத்துள்ளது.