முதல் முறையாக குறைக்கப்பட்ட கட்டணம்! பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!

0
154
first-time-reduced-fees-crazy-announcement-in-the-budget
first-time-reduced-fees-crazy-announcement-in-the-budget

முதல் முறையாக குறைக்கப்பட்ட கட்டணம்! பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!

தமிழக சட்டசபையின் நடைபாண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒரு சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் நேற்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவே தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை தொடங்கினார். கடந்து சில ஆண்டுகளாகவே காகிதம் இல்லா இ  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் அந்த வகையில் இந்த முறையும் அவ்வாறே இ பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.

அப்போது குடும்ப தலைகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ரூ 1000 உரிமைத் தொகை வழங்குதல், பள்ளி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு, அரசு பேருந்துகளில் மூத்த அறிஞர்களுக்கு இலவச பயணம் போன்ற அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு என்ற தகவலை பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தமிழக அரசு அனுப்பியுள்ளது.

மேலும் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் டெம்ப்ளேட்களாகவும்,  வீடியோக்களாகவும் தயார் செய்து தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறையின்  டுவிட்டர்  பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பத்திர பதிவு கட்டணம் நான்கிலிருந்து இரண்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் அறிவிப்புகள் அனைத்தும் தினசரி நாளிதழ்கள் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி மூலமாக வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது முதன்முறையாக குறுஞ்செய்தி மூலமாக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K