உருவாகும் புயல் சின்னம்! கடலூர் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை!

0
111

நேற்றைய தினம் கடலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் மோசமான வானிலையின் காரணமாக கடல் காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே கடலூர் மாவட்டத்தை சார்ந்த எல்லா வகையான மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே கடலில் இருக்கின்ற தங்கு கடல் படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் இந்த அறிவிப்பை தவறாமல் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதோடு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானந்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாளைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. என்றும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

அதேபோல நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓர் இரு பகுதிகளில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

வரும் 12ஆம் தேதி தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானம் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.