பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் 5 நாள் விடுமுறையா? தமிழக அரசின் அதிரடியால் பரபரப்பு!

0
66

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக, செப்டம்பர் மாதம் 1ம் தேதி திறக்கப்பட்ட பள்ளிகள் சென்ற மாதம் முதல் மறுபடியும் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்கள் எல்லோருக்கும் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு குறைந்திருப்பதன் காரணமாக, நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் செயல்படவிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியானது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கின்றது.

இதன்காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கருத்தில் வைத்து பிப்ரவரி மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரையில் தொடர்ந்து 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகின்ற மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கின்ற மையங்கள் இருக்கின்ற பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு வழக்கம் போல பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.