பாத எரிச்சல் மற்றும் குதிகால் வலி சரியாக! ஒரு வெற்றிலை போதும்!

பாத எரிச்சல் மற்றும் குதிகால் வலி சரியாக! ஒரு வெற்றிலை போதும்!

குதிகால் வலி பாத எரிச்சல் போன்ற பிரச்சனைகள் சரியாக வீட்டு வைத்தியம்.இந்த குதிகால் வலி ,பாத எரிச்சல் போன்ற பிரச்சனைகள் பல காரணங்களால் வரக்கூடும். உடல் எடை அதிகமாக இருப்பது, கால்சியம் குறைபாடு மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பது. உடலில் பித்தம் அதிகமாக இருந்தாலும் இந்த பாத வலி மற்றும் பாத எரிச்சல் வரக்கூடும். கால்சியம் குறைபாடு ,இரும்பு சத்து குறைபாடு, போன்ற சத்து குறைபாட்டினால் தேவையற்ற மாத்திரைகளை நாம் எடுத்துக் கொள்வதில். அதன் பக்க விளைவாக தான் இந்த பாத எரிச்சல், பாத வலி போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.முதலில் பாத வீக்கம், குதிகால் வலி இதற்கான வீட்டு வைத்தியத்தை இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் ஒரு வெற்றிலையை எடுத்து அதனுடைய காம்பு பகுதி மற்றும் நுனிப்பகுதியை அகற்றி கொள்ள வேண்டும். பிறகு சிறிதளவு கசகசா, 7முதல் 10 வரை வெந்தயம் ,சிறிதளவு சீரகம் இந்த மூன்று பொருட்களையும் அந்த வெற்றிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை மடித்து வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும். முதலில் வரும் உமிழ் நீரை துப்பிவிட்டு பிறகு நன்றாக மென்னு சாப்பிட வேண்டும். இதனை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. இவ்வாறு செய்தால் 10 நிமிடங்களில் குதிகாலில் ஏற்பட்ட வீக்கம் குறைந்து காணாமல் போய்விடும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் அந்த பாத எரிச்சல் மற்றும் குதிகால் வலி குணமாகிறது.