காலை உணவு சாப்பிடாமல் செல்பவர்களா!!அவர்களுக்கான சில காலை நேர ஸ்மூத்திகள் இதோ!!

0
50

காலை உணவு சாப்பிடாமல் செல்பவர்களா!!அவர்களுக்கான சில காலை நேர ஸ்மூத்திகள் இதோ!!

காலை வேலையில் சிலர் தங்கள் காலை நேர உணவை தவிர்த்துவிட்டு செல்கிறார்கள். அலுவலகங்கள் செல்பவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்பவர்கள் என பல பேர் காலை நேர உணவை நேரம் இன்மை காரணத்தால் காலை உணவை தவிர்த்துவிட்டு செல்கின்றனர். இந்த காலை நேர உணவை தவிர்ப்பதால் உடலுக்கு பல தீமைகள் நடக்கின்றது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் எளிமையாக உடலை தாக்குகின்றது. மேலும் வயிற்றுப்புண், குடல் புண் போன்ற நோய்கள் காலை நேர ஈணவை தவிர்ப்பதால் ஏற்படுகின்றது.

இந்த நோய்களை தடுக்க ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில இயற்கையான  பானங்களை எவ்வாறு தயாரிப்பது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும், உடனடியான ஆற்றலைத் தரக்கூடிய சில ஸ்மூத்தி வகைகளை பற்றி பார்ப்போம்.

1.ஆப்பிள் – இஞ்சி ஸ்மூத்தி

தேவையான பொருள்கள்…

* ஆப்பிள் – 1

* இஞ்சி – 1/2 இன்ச்

* எலுமிச்சம் பழம் – அரை பழம்

* தேன் – கால் கப்

* தண்ணீர் – 1 கப்

* ஐஸ் கட்டி – 1 கப்

செய்முறை…

முதலில் மிக்சி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் ஆப்பிளை தோல் நீக்கி விதைகளை நீக்கி துண்டுகளாக அறுத்து எடுத்து மிக்சி ஜாரில் கொள்ளவும். அரை இன்ஞ் இஞ்சியை தோல் நீக்கி எடுத்து அந்த மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் அரை எலுமிச்சம் பழச் சாறை பிழிந்து விட்டுக் கொள்ளவும். இதனுடன் தேன் கால் கப் சேர்த்து தண்ணீர் ஒரு கப் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதில் எடுத்து வைத்துள்ள ஒரு கப் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு கலந்து குடிக்கலாம். இதில் எந்த அளவுக்கு சுவை உள்ளதோ அதே அளவுக்கு உடலுக்குத் தேவையான சத்துக்களும் உள்ளது.

2.வாழைப்பழம் தேன் ஸ்மூத்தி

தேவையான பொருள்கள்…

* வாழைப்பழம் – 1

* தேன் – ஒரு டேபிள் ஸ்பூன்

* மல்ட் பவுடர் – ஒரு டேபிள் ஸ்பூன்

* ஸ்கிம்ட் மில்க் – ஒன்றரை கப்

* லவங்க பட்டை தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை…

ஒரு மிக்சி ஜார் எடுத்துக் கொள்ளவும். அதில் துண்டுகளாக்கப்பட்டு உறையவைக்கப்பட்ட வாழைப்பழத் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் மல்ட் பவுடர், ஸ்கிம்ட் மில்க், தேன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கூடுதல் சுவைக்கு வேண்டும் என்றால் லவங்கப் பட்டை தூள் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

3.ராகி மாம்பழ ஸ்மூத்தி

தேவையான பொருள்கள்…

* ராகி மாவு – 5 டேபிள் ஸ்பூன்

* மாம்பழம் – 1

* தயிர் – 1 கப்

* பால் – கால் கப்

* உப்பு – தேவையான அளவு

செய்முறை…

முதலில் 5 டேபிள் ஸ்பூன் ராகி மாவை தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கஞ்சியாக தயார் செய்து கொள்ளவும். பின்னர் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் இந்த ராகியை சேர்த்துக் கொள்ளவும். பிறகு மாம்பழத்தை எடுத்து துண்டுகளாக நறுக்கி இதில் சேர்த்துக்  கொள்ளவும். பின்னர் தயிர் பால் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை நன்கு குளிர வைத்து மாம்பழத்துண்டுகளை சேர்த்து குடிக்கலாம்.

இந்த மூன்று ஸ்மூத்திகளில் ஏதாவது ஒன்றை காலை நேரத்தில் உணவை தவிர்ப்பவர்கள் குடிக்கலாம். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்தியும், உடனடியாக உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கின்றது.