என்னை 10 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கத் திட்டம்! முன்னாள் பிரதமர் டுவீட்!!

0
128
#image_title
என்னை 10 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கத் திட்டம்! முன்னாள் பிரதமர் டுவீட்!
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் அவர்கள் பாகிஸ்தான் ராணுவம் தன்னை 10 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கத் திட்டம் தீட்டுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அல்-காதிர் அறக்கட்டளை உழல் வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டில் கலவரங்கள் வெடித்தது. இதையடுத்து ஜாமீனில் வெளி வந்த இம்ரான் கான் அவர்களை மே 17ம் தேதி வரை எந்த ஒரு வழக்கிலும் கைது செய்யக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது தனது இல்லத்தில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் “தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் பாகிஸ்தான் நாட்டின் இராணுவம் என்னை அடுத்த 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளது. முதலில் வேண்டும் என்றே என்னுடைய கட்சிக்காரர்கள் மீது வன்முறையானது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நாட்டில் சாதாரண மக்களும், ஊடகங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாளை என்னை கைது செய்ய வரும்பொழுது மக்கள் வெளியே வரக்கூடாது என்பதற்கும் வெளியே வரமாட்டார்கள்  என்பதற்காகவே இது திட்டமிடப்பட்டுள்ள முயற்சி. நாளை மீண்டும் இணையதள சேவைகள் முடக்கப்படும்.
ஊடகங்களை தடை  செய்வார்கள். பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு நான் சொல்லும் செய்தி என்ன என்றால் எனது உடலில் கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை நான் சுதந்திரத்திற்காக போராடுவேன். அல்லா ஒருவரை தவிற வேறு யாருக்கும் தலை வணங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொண்டோம். அதை என் மக்கள் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.