திடீரென்று குறைக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

0
62

சமீப காலமாகவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தாறுமாறாக எகிறி வந்தது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். தமிழக அரசும் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.இதனையடுத்து எதிர்கட்சியான திமுக இதுதொடர்பாக கடுமையாக விமர்சனம் செய்தது.இந்த நிலையில்தான் அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியானார்கள் அதோடு இல்லத்தரசிகள் மத்தியில் தமிழக அரசுக்கான ஆதரவு பெருகியது இதன் காரணமாக எதிர்கட்சியாக திமுக கடும் அதிர்ச்சிக்கு ஆளானது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின்படி பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், சிலிண்டரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விலை மாற்றம் ஆனது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்திருக்கிறது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இந்நிலையில் 10 ரூபாய் குறைக்கப்பட்டதன் காரணமாக, சிலிண்டரின் விலை ரூபாய் 835 இருந்து 825 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு கடந்த சில தினங்களில் பெட்ரோல் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 61 பைசா வரை குறைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் சிலிண்டரின் விலை ஏற்றப்படும் போது மட்டும் அதிகமாக ஏற்றப்படுகிறது குறைக்கப்படும் போது மட்டும் 10 ரூபாய் மட்டுமே குறைக்கப்படுகிறது இது நியாயமில்லை என்று இல்லத்தரசிகள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.