மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
63
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும்.

பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் வந்து சேரலாம். உபயோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் கவனம் அதிகமாக இருக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு கடமை உணர்ச்சி அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani