சுலபமாக கிடைக்கும் தங்க நகை கடன் வாங்குவதற்கான முக்கிய 5 தேவைகள்!

0
93

இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எப்போதும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருப்பது பணப் பிரச்சனை தான் சிறுக, சிறுக சேர்த்து கொஞ்சம் நகை வைத்திருப்பார்கள். அதே நேரம் வேறொரு சமயத்தில் கஷ்டம் என்று வரும் போது வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெற அதே நகைகள் தான் உதவியாக இருக்கும்.

நமது ஊதிய சான்றிதழ்களை வைத்து பர்சனல் லோன், கிரெடிட் கார்டு லோன் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும். ஆனாலும் அவற்றிற்கு வட்டி கூடுதலாக இருக்கிறது. ஆனால் தங்க நகை கடனில் வட்டி குறைவு என்பதால் மக்கள் இதையே தேர்வு செய்கிறார்கள்.

அத்துடன் நம்மிடம் இருக்கும் நகைகளுக்கு ஏற்றவாறு கடன் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்ப பரிசீலனை அது, இது என்ற மற்ற நடைமுறைகளால் தாமதம் இல்லாமல் விரைவாக கிடைக்கக் கூடியது தங்க நகை கடன் மட்டும் தான். இப்படி பல வகைகளும் சாதகமான நிலையை தன் வசம் வைத்திருக்கும் நகைக்கடனை எப்போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தொடர்பாக நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் சிறிய அளவில் தொழில் செய்து வந்தாலும் சரி, அல்லது பெரிய வர்த்தக நிறுவனங்களை நடத்தி வந்தாலும் சரி தங்களுடைய வணிகத்தை விரிவுபடுத்த நிதி தேவைப்படுகிறது என்றால் நகை கடன் பெற்றுக் கொள்ளலாம். தொழில் கடன் பெற முயற்சி செய்யும் போது பல நிபந்தனைகளால் அது தாமதமாக கூடும். ஆனால் கடன் பெறுவதற்கான உத்தரவாதம் நகைகள் மூலமாக கிடைக்கும்.

நம்முடைய வாரிசுகளின் கல்வி தேவைகளுக்காக கல்வி கடன் கிடைத்து விட்டால் அது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு அமைந்து விடுவதில்லை. கடந்த கால நடவடிக்கைகள் குறைவான மதிப்பின் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கல்வி கடன் மறுக்கப்படலாம். இது போன்ற சமயத்தில் தயங்காமல் நகை கடன் பெறலாம்.

எப்போது யாருக்கு என்ன நடக்கும், வாழ்க்கை பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம் என்பதில்லாமல் நாம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக விபத்துக்கள் உயிர் காக்கும் ராஜ உறுப்புகளின் பாதிப்புகள் உள்ளிட்டவை ஏற்படுகின்ற நேரத்தில் ஏற்படும் மருத்துவ செலவு உண்டாவதை தவிர்க்க இயலாது. அது போன்ற தருணங்களில் நகை கடன் பெறலாம்.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அவ்வளவு சிறப்பு மிக்க திருமண செலவுகளுக்கு பணம் இன்றி தவிக்கும் தருணத்தில், நகை கடனை விடவும் சிறப்பான வாய்ப்பு வேற எதுவும் இருக்க முடியாது. இதைத் தவிர திருமணத்தில் கிடைக்கும் மொய் மூலமாக கடனை உடனடியாக அடைக்க முடியும்.

மேலே குறிப்பிட்ட 4 காரணங்களும் அத்யாவசிய தேவைகளாக நமக்கு தெரிந்தாலும் சுற்றுலா காரணத்திற்காக நகை கடன் பெறுவது அனாவசியமாக தங்களுக்கு தோன்றலாம். ஆனால் நகை கடனை குறுகிய காலத்திற்குள் அடைப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறது என்றால் கடன் பெற்று சுற்றுலா செல்வதில் எந்த விதமான தவறும் இல்லை.

ஏனெனில் கல்வி மீது கவனம் செலுத்தும் குழந்தைகளுக்கு உண்டாகும் மன இறுக்கம், அலுவலகப் பணி மற்றும் குடும்ப பொறுப்புகளை சுமக்கும் பெண்களுக்கு ஏற்படும் உடல் சோர்வு வணிக ரீதியில் தங்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதாக அமையக்கூடிய சுற்றுலாவுக்கு செலவு செய்வதில் தவறு எதுவும் இல்லை.