தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! மக்களுக்கு ஆட்டம் காட்டும் தங்கம்! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!

0
94

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! மக்களுக்கு ஆட்டம் காட்டும் தங்கம்! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே குறைந்த வந்தது ஆனால் இன்று திடீரென அதிகரித்துள்ளது.

கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்தும் முடங்கிப் போய்க் கிடந்த நிலையில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாகவே குறைந்து வந்த நிலையில் இன்று ஏறுமுகமாக அதிகரித்துள்ளது இன்று கிராமிற்கு 92 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 736 ரூபாய் அதிகரித்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.92 அதிகரித்து
ரூ.5167-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.736 அதிகரித்து ரூ.41336-க்கு விற்கப்படுகிறது.


சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.
ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.97 ரூபாய் அதிகரித்து ரூ.5425 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.776 அதிகரித்து ரூ.43400-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி கிராமிற்கு ரூ.1.60 அதிகரித்து ஒரு கிராம் 76.30-விற்க்கும், ஒரு கிலோ
ரூ.76300 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் ஆட்டம் காட்டி ஏறத் தொடங்கியுள்ளது தங்கம் . இந்த உயர்வு மக்களை மிகவும் பாதித்துள்ளது. ஏழைகளின் வாழ்வில் தங்கம் கனவாகவே போய்விடும் போலிருக்கிறது.