ATM கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாமென்று எத்தனை பேருக்கு தெரியும்! தெரிந்துகொள்ளுங்கள்!

0
88

ATM கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாமென்று எத்தனை பேருக்கு தெரியும்! தெரிந்துகொள்ளுங்கள்!

தற்போது ஏடிஎம் மோசடி ஏடிஎம் கொள்ளை போன்றவற்றை தடுக்கும் வகையில் சில வங்கிகள் ஏடிஎம் இல்லாமலேயே ஏடிஎம் மெஷினிலிருந்து பணம் எடுக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த முறையின் மூலம் உங்கள் ஏடிஎம் கார்டுகள் பாதுகாப்போடு இருப்பதுடன்,சில நேரங்களில் அவசர தேவைக்காக ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும் பொழுது திடீரென்று ஏடிஎம் – யை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்திருப்போம்.இது போன்ற அவசர தேவைகளுக்கும் ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்.

ஏடிஎம் கார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி?

ஏடிஎம் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி

1. முதலில் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியானது இந்த சேவையை வழங்குகிறதா என்பதனை தெரிந்து கொள்ளவும்.

2. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியானது இந்த சேவையை தொடங்கினால் அந்த வங்கிக்கு உரிய ஆஃப்-யை நாம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

3. எடுத்துக்காட்டாக நீங்கள் எஸ்பிஐ வங்கி கணக்கை பயன்படுத்துபவராக இருந்தால்,YONO என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.

4. YONO ரொக்க விருப்பத்திற்கு’ சென்று, பின்னர் ‘மொபைல் ஆன் கேஷ்’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.

5. பின்னர் ‘card-less cash withdrawal’ என்பதைக் கிளிக் செய்து நீங்கள் திரும்பப் பெற விரும்பும் பணத்தின் (withdrawal limit) அளவை நிரப்பவும்.

6.பின்னர் வங்கி பயன்பாட்டின் பின்னை(password) பதிவுசெய்யவும்.

7.பிறகு நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணி இருக்கு வங்கியிலிருந்து ஒரு ஓடிபி வரும்.இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இருக்கும்.otp-யை நீங்கள் டெலீட் செய்து விடக்கூடாது.இதுதான் நீங்கள் பணம் எடுக்க உதவும்.

8. இதற்குப் பிறகு, உங்கள் வங்கியின் ஏடிஎம்-க்குச் சென்று
‘card-less cash withdrawal’ விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

9. பிறகுஉங்கள் போன் நம்பரை உள்ளிடவும்.பிறகு நீங்கள் பெறப்பட்ட அந்த otp-யை உள்ளிடவும்.

10. பயன்பாட்டில் நீங்கள் பூர்த்தி செய்த பணத்தின் சரியான அளவை உள்ளிடவும், ஏடிஎம் டெபிட் கார்டு இல்லாமல் பரிவர்த்தனை முடிந்தது.

தற்போது வரை இந்த பயன்பாட்டை SBI, ICICI Bank மற்றும் Bank of Baroda வங்கிகள் கொண்டுவந்துள்ளன.

Sbi bank – yono
Icici bank- iMobile
BOB- mconect plus என்ற அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

author avatar
Pavithra