மீண்டும் உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை! இந்நிலை நீடித்தால் மக்களின் நிலை என்ன?

0
70

 

தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் அனைத்து நாடுகள் பொருளாதார ரீதியாக முடங்கி போன நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டுகளில் தங்கத்தின் விலை குறைந்து வந்துள்ள நிலையில் கொரோனா காரணமாக ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடுகிறது.

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.5,084 க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.40,512 க்கு விற்கப்பட்டு வருகிறது

மேலும் வெள்ளி விலையும் அதிகரித்து வரும் நிலையில் ஒரு கிராமுக்கு ரூ.1.60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.30 க்கு விற்கப்படுகிறது.

இவ்வாறு நீடித்தால் தங்கத்தை வாங்கவே அச்சம் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதை பற்றி தங்க வியாபாரிகளிடம் வினவியபோது தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறும் நிலை உள்ளதாகவும் குறைய வாய்ப்பு இல்லை எனவும் கூறுகின்றனர்.

author avatar
Kowsalya