மத்திய அரசின் பேச்சுவார்த்தை! கூட்டாக புறக்கணிக்கும் நாடாளுமன்ற எதிர்க் கட்சிகள்!

0
72

நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும், எப்போது கூடினாலும் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் பல திட்டங்களை கொண்டு வந்து அதனை சட்டமாக நிறைவேற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதுசமயம் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் ஆளுங்கட்சியின் முயற்சியை முறியடிக்க வெளியே குறியாக இருப்பார்கள். வெளிநடப்பு செய்வது , சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தை புறக்கணிப்பது, உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு தான்.

ஆனால் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது சாதாரண மற்றும் சாமானிய மக்கள் மட்டுமே தங்களுடைய கட்சியின் கொள்கைக்கு எதிர்மறையாக இருக்கிறது என்று மற்றொரு கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கும் விதமாக அரசியல் கட்சிகள் செயல்படும் சமயத்தில் அந்த செயற்பாட்டின் காரணமாக, அதிகமாக பாதிக்கப்படுவது சாதாரண குடிமகன் தான் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

அந்த விதத்தில் சென்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடுமையான அமளியில் ஈடுபட்டதாக 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்யப்பட்டார்கள். இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் உள்ளேயும் , வெளியேயும், போராட்டத்தில் இறங்கினார்கள்.

இதன் காரணமாக, இரண்டு அவைகளிலும் அலுவல் பணி முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களவையில் முதல்வாரத்தில் 49.70 சதவீதம், இரண்டாவது வாரத்தில் 50 2.5% மற்றும் மூன்றாவது வாரத்தில் 63% அலுவலக நேரம் பாதிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில், சென்ற வெள்ளிக்கிழமை அன்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் இந்த பிரச்சனைக்கு வாரயிறுதி நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் சிபிஐ, சிபிஎம், சிவசேனா, உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு மட்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார். சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் தெரிவிக்கும்போது இன்று காலை 10 மணி அளவில் பாராளுமன்ற நூலக கட்டிடத்தில் கூட்டம் நடைபெற இருக்கிறது என கூறினார்.

இந்த சூழ்நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக போராடினார்கள். ஆனாலும் எல்லா எதிர்க் கட்சித் தலைவர்களையும் கூட்டத்திற்கு அழைக்காமல் குறிப்பிட்ட கட்சிகளின் தலைவர்களை அழைத்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது, நியாயம் இல்லாதது எனக் கூறினார்

இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சியை சார்ந்த தலைவர்களை மட்டும் பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு அழைத்து இருப்பதால் அவர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் எதிர்க் கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.