ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை வெளியீடு! எத்தனை பேர் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் அனுமதி?

0
124

ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை வெளியீடு! எத்தனை பேர் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பிற்கு அடுத்தபடியாக மக்களின் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு தைப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டு பொங்கல் நாளன்று கொண்டாடப்படுவது வழக்கம்.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் பிரசித்தி பெற்றது. அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அந்த வகையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி அளித்து சில கட்டுப்பாடுகளையும் விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், 300 மாடுபிடி வீரர்களை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்றும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய வீரர்களை மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பே அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள  அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K