சீன் வில்லியம்ஸின் அபார ஆட்டம்… ஜிம்பாப்வே அணி 408 ரன்கள் குவித்து அபார வெற்றி

0
159
#image_title

சீன் வில்லியம்ஸின் அபார ஆட்டம்… ஜிம்பாப்வே அணி 408 ரன்கள் குவித்து அபார வெற்றி

 

நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற்று வரும நிலையில் யு.எஸ்.ஏ அணிக்கு எதிரான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 408 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு சீன் வில்லியம்ஸ் அவர்களின் சதம் முக்கிய காரணம் ஆகும்.

 

நடப்பாண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் நேற்றைய(ஜூன்26) ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியும் யு.எஸ்.ஏ அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற யு.எஸ்.ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

#image_title

இதையடுத்து முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடினர். 50 ஓவர்களின் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து சீன் வில்லியம்ஸ் 21 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என மொத்தம் 174 ரன்கள் சேர்த்தார்.

 

தொடக்க வீரர் ஜே கும்ப்ளே அரைசதம் அடித்து 78 ரன்களும், சிக்கந்தர் ராஸா 48 ரன்களும் அதிரடியாக விளையாடிய ரயன் பர்ல் 16 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். யு.எஸ்.ஏ அணியில் அபிஷேக் பரட்கர் 3 விக்கெட்டுகளையும், ஜெஸ்ஸி சிங் 2 விக்கெட்டுகளையும், நேஸ்தஸ் கென்ஜி(ல்)கே 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து 409 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யு.எஸ்.ஏ அணியின் பேட்ஸ்மேன்கள் ஜிம்பாப்வே அணியின் பநதுவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இதையடுத்து 409 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய யு.எஸ்.ஏ அணி 104 ரனகளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

யு.எஸ்.ஏ அணியில் அதிகபட்சமாக அபிஷேக் பரட்கர் 24 ரன்களும், ஜஸ்தீப் சிங் 21 ரன்களும் கஜனந்த் சிங் 13 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களிலும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகியும் சென்றனர். ஜிம்பாப்வே அணியில் ரிச்சர்ட் இங்கர்வா, சிக்கந்தர் ராசா, ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பிராட் இவான்ஸ், ரயன் பர்ல், லூக் ஜாங்வே ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணியில் சதம் அடித்து 174 ரன்கள் குவித்த சீன் வில்லியம்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற சாதனையை படைத்துள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் இலங்கை அணிக்கு எதிராக 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.