டிராவிட் என்ற அபார மனிதர்! சீரும் சிங்கமாய் களத்தில் இளம் காளைகள்!

0
68

திராவிட் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மென் மட்டும் கிடையாது. அவர் ஒரு உன்னதமான நல்ல மனிதரும் கூட என்று சொல்லலாம். அவருடைய வார்த்தைகளை செவிகொடுத்து கேட்டால் உறங்கிக் கொண்டிருக்கும் போது கூட சாதனை புரியலாம். இலங்கை நாட்டிற்கு சென்று இருக்கும் இந்திய அணியின் ஏ பிரிவின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அறிவிக்கப்பட்டார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணியுடன் இருப்பதன் காரணமாக, இந்திய அணியின் ஏ பிரிவை வழி நடத்துவதற்கு ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டதில் ஒரு சிலருக்கு கடுமையான எரிச்சல், இன்னும் சிலருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி, அதிலும் குறிப்பாக அவரை நன்றாக அறிந்து வைத்திருந்தவர்கள் அவருடைய தேர்வை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள். அதற்கு காரணமாக, சொல்லப்படுவது அவர் அணிக்கு அவ்வளவு முக்கியமானவர் என்பது எல்லோரும் அறிந்ததுதான்.ஒட்டு மொத்தமாக 20 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்து இலங்கை நாட்டிற்கு அனுப்பியது பிசிசிஐ. அதில் ஏராளமான இளம் வீரர்கள் அதிலும் பலர் ராகுல் டிராவிட் பயிற்சி அளித்த 19 வயதிற்கு உட்பட்டோர் அணிக்காக விளையாடியவர்கள். அவ்வாறான வீரர்களுக்கு டிராவிட் அவர்களின் பயிற்சி எவ்வாறு இருக்கும் என்று மிக நன்றாகத் தெரியும்.

இங்கிலாந்து செல்ல இருந்த இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படாமல் இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. காரணம் மிக நீண்ட தினங்களாகவே அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் மெது மெதுவாக குணமடைந்து விட்டார். இருந்தாலும் அவரால் முன்பைப் போல பந்துவீச்சை இயலாது என்று சொல்லப்படுகிறது. மத்தியில் மட்டும் கவனம் செலுத்தினார் ஹர்திக் பாண்டியா. அவர் ஆல்ரவுண்டர் என்பதால்தான் அவருக்கு மதிப்பு என்று சொல்லப்படுகிறது. அந்த பெயரை அவர் இழந்த உடனேயே இங்கிலாந்து போன்ற ஆல்ரவுண்டர் தேவைப்படும் ஆடுகளுக்கு அவர் எந்தவிதமான தகுதியும் அற்றவர் என்று அவரை பிசிசிஐ புறக்கணித்து. தாகூரை இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பி விட்டது. இதில் நியாயமும் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான், அவரை இலங்கை அணியுடன் விளையாட இருக்கும் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, அவர் தான் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் தவானை கேப்டனாக நியமனம் செய்தது பிசிசிஐ. சரி பரவாயில்லை துணை கேப்டன் பதவி அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் புவனேஷ்வர் குமாருக்கு கொடுக்கப்பட்டு விட்டது.

ஒருவேளை அவர் இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்படுகிறார் ? அல்லது அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது என்ற பயம் எழச் செய்தது. அதற்கு காரணம் ஆல்ரவுண்டர் என்ற தகுதியை ஓரமாக வைத்துவிட்டு உற்று நோக்கினால் அவருடைய அடையாளம் பெரிய அளவில் இல்லை என்பது மட்டுமே. இருந்தாலும் இங்கே சிக்ஸர்கள் பறக்கவிடும் பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமே இல்லை என்ற சூழ்நிலையில், தான் டிராவிட் பல விஷயங்களை உரையாடி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிலும் குறிப்பாக அவரிடம் அவருடைய ஆல்ரவுண்டர் திறனை மறுபடியும் வெளியே எடுத்து வர டிராவிட் மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது. மனதளவிலும், உடல் அளவிலும், சரி இரு விதத்தில் அவர் ஹர்திக் பாண்டியாவை சீராக வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. முதுகுவலிக்கு ஏற்றவாறு அவருடைய பந்து வீச்சில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக அவர் இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் நிச்சயமாக விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.