10 விதமான வாயு மற்றும் அஜீரண கோளாறுகளை சரி செய்யும்!

0
141

இன்றைய காலத்தில் எதற்கு எடுத்தாலும் பாஸ்ட் புட், செரிக்காமல் வாயு தொல்லையால் அவதி படுவார்கள், கணினியில் உட்கார்ந்து வேலை பார்த்து உணவு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமல் உணவு செரிமான பிரச்சனை ஏற்படும், அதற்கு இந்த சூரணம் சாப்பிட்டால் போதும்.

 

தேவையான பொருட்கள்

 

1. சுக்கு – 50 கிராம்

2. மிளகு – 50 கிராம்.

3. திப்பிலி – 50 கிராம்

4. ஓமம் – 50 கிராம்

5. சீரகம் – 50 கிராம்

6. சோம்பு – 50 கிராம்

7. இந்துப்பு – 50 கிராம்

8. பெருங்காயம் – 50 கிராம்

 

 

சுத்தம் செய்யும் முறை

 

சுக்கு : சுக்கை வாங்கி சுண்ணாம்பு குழைத்து சுண்ணாம்பில் முக்கி எடுத்து காய வைத்து நன்றாக காய்ந்ததும் தோல் நீக்கி இடித்து சளித்து பத்திரபடுதவும்

 

மிளகு : புளித்த மோரில் மிளகை ஊற வைத்து அதில் தாழ்ந்த மிளகை எடுத்து காயவைத்து பொடித்து வைக்கவும்.

 

திப்பிலி: – திப்பிலியை கொடுவேலி சாற்றில் ஊறவைத்து காயவைத்து பொடித்து வைக்கவும்.

 

ஓமம் : சுண்ணநீரில் ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். பிறகு காடா துணியில் வைத்து தேய்க்க ஓமத்தில் மேலுள்ள சட்டை எல்லாம் கழண்டு வரும். இந்த ஓமம் காரமாக இருக்கும்.

 

இந்துப்பு: காடியில் ஊறவைத்து வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

 

சீரகம் ; தூசு தும்பு நீக்கிய சுண்ணாம்பு தெளி நீரில் நனைத்து காயவைத்து கொள்ளவும்.

 

கருஞ்சீரகம்: தூசு தும்பு நீக்கி புடைத்து வறுத்து எடுத்து கொள்ளவும்.

 

பெருங்காயம்: சிறிது நல்லெண்ணெய் விட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

 

செய்முறை:

 

1. பெருங்காயம், சுக்கை தவிர்த்து மற்ற கடைசரக்குகளை தனித்தனியே இளம் வறுப்பாக வறுத்து இடித்து சலித்து ஒன்றாக கலந்து புட்டியில் அடைக்கவும்.

2. பின் பெருங்காயம் மற்றும் சுக்கை சேர்த்து புட்டியில் அடைக்கவும்.

3. செரியாமை பிரச்சனை உள்ளவர்கள் 1 தேக்கரண்டி சூரணம் தினமும் சாப்பிடும் பொழுது நல்லெண்ணெய் விட்டு சாதத்துடன் பிசைந்து 2 அல்லது 3 கவளம் முதலில் சாப்பிட்டு பிறகு சாதம் சாப்பிட செரியாமை நீங்கும்.

குடற்புண், வாயுக்கோளாறுகள், வாத குன்மம், அஜீரணம், ருசி இன்மை, வயிற்று வலி, பசியின்மை, நெஞ்செரிச்சல், வாயுவினால் நெஞ்சடைப்பு, வயிற்று போக்குடன் கூடிய அஜீரணம், செரியானம், தினம் உள்ளுக்கு சாப்பிட செரிமானத்தை உண்டு செய்யும், மேலும் பல பிரச்சனைகளை சரி செய்யும்