பலரும் அறிந்திறாத வெந்தயத்தின் நன்மைகள்!! இத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வா?

0
73

பலரும் அறிந்திறாத வெந்தயத்தின் நன்மைகள்!! இத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வா?

பொதுவாகவே அனைவருக்கும் வெந்தயம் சாப்பிடுவதால் உடலில் சூடு நீங்கி குளிர்ச்சி உண்டாகும் என்றும், ஊறவைத்து அரைத்து தேய்த்தால் தலை முடி நன்றாக வளரும் என்றும் தெரியும்.பெண்களின் மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியின் போது வெந்தயத்தை சாப்பிட்டால் வயிற்றுவலி கட்டுக்குள் வரும் என்பது அனைவரும் தெரிந்ததே.ஆனால் வெந்தயத்தில் இதற்கு மேலான பல பயன்கள் உள்ளன. ஏன் இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கூட இந்த சிறு வெந்தயத்திற்கு இருக்கின்றது. ஆனால் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதனை இதில் பார்ப்போம்.

வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்:

வெந்தயத்தில் வைட்டமின் சி,நார்ச்சத்து,இரும்புச்சத்து, புரோட்டின்,பொட்டாசியம், நியாசின் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.

வெந்தியத்தை எப்படி சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்?

1.வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கும் மலச்சிக்கலைப் போக்கும்.மலச்சிக்கல் பிரச்சனை நீங்க வெங்காயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டியும் குடிக்கலாம்.

2.வெந்தியத்தில் அமினோ அமிலம் இருப்பதால் உடலில் இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கும்.இதனை நாம் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.

3.வெந்தியத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்துவிடும்.மேலும் உணவில் உள்ள கெட்ட கொழுப்புகளை இதில் நிறைந்துள்ள ட்ரைகிளரசைட் என்னும் பொருள் ரத்தத்தில் சேராமல் உடலை பாதுகாக்கும்.

4. இதில் இரும்புச் சத்து நார்ச் சத்து என்று கீரையில் உள்ளது போன்றே,அனைத்தும் சத்துக்களும் இந்த வெந்தயத்தில் உள்ளதால், உடலில் அதிக சக்தியை அதிகரிப்பதோடு,உடல் பருமனையும் குறைக்க இது மிகவும் பயன்படுகின்றது.

5.மனம் அழுத்தம் காரணமாக அவ்வப்போது சிலருக்கு இதயம் வலிப்பது போல் ஒரு உணர்வு தோன்றும்,தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் இந்த இதய பிரச்சனைக்கு வெந்தயம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அப்படியே சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.
வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரையும் குடித்து வந்தால் நல்ல பலன் தரும்.

author avatar
Pavithra