மூட்டு வலி தொல்லையா:? இதோ சித்தர்கள் சொன்ன வைத்தியம்!! ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!!

0
57

மூட்டு வலி தொல்லையா:? இதோ சித்தர்கள் சொன்ன வைத்தியம்!! ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!!

30 வயதிற்கும் மேற்பட்ட பலரும் மூட்டு வலி பிரச்சனையால் அவதிக்குள்ளாகின்றனர்.இந்த பிரச்சனைக்கு பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் பலனில்லை என்று புலம்புவோர் பலர் இருக்கின்றனர்.அப்படி மூட்டு வலியில் அவதிப்படுவோருக்கு ஓர் அருமருந்து முடக்கத்தான் கீரையாகும்.

இந்த கீரைக்கென்று சித்தர்கள் பாட்டே பாடி வைத்துள்ளனர்.
அவ்வளவு சிறப்பு மிக்க இந்த முடக்கத்தான் கொடி சாதாரணமாக வயல்வெளில் படர்ந்து இருக்க கூடியவையாகும்.இந்த முடக்கத்தான் கீரையில் ஏராளமான நன்மைகள் உள்ளன.இந்த பதிவில் முடக்கத்தான் கீரையை மூட்டு வலிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை தெரிந்து கொள்வோம்.

முடக்கத்தான் இலையை நன்றாக தண்ணீரில் அலசி தண்ணீர் வடியும் வரை உலர்த்தி பின்பு விளக்கெண்ணெயில் நினைத்து மூட்டு வலி இருக்கும் இடத்தில் நன்றாக தேய்த்து வருகையில் விரைவில் குணமாகும்.

மேலும் வாரத்திற்கு ஒரு முறையாவது முடக்கத்தான் கீரையை சூப் வைத்துக் குடித்தோ அல்லது தோசை ஊற்றியோ சாப்பிட்டு வருகையில் உடலின் பலவிதமான பிரச்சனைகளுக்கு மருந்தாக அமையும்.

author avatar
Pavithra