ஹாங்காங்கில் மருத்துவர்கள் திடீர் ஸ்டிரைக்: கொரோனா வைரஸ் காரணமா?

0
72

ஏற்கனவே சீனாவுக்கு எதிராக ஹாங்காங் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவி வருவதால் உடனடியாக சீனா எல்லையை மூட வேண்டும் என ஹாங்காங் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக 400க்கும் அதிகமானோர் பலியாகி உள்ள நிலையில் சீனாவுக்கு வெளியேயும் ஒரு சில உயிர் பலியாகியுள்ளது

இந்த நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் ஹாங்காங்கில் இந்த வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் சீனாவிற்கு வெளியே ஹாங்காங்கில் இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள ஹாங்காங் மருத்துவர்கள் உடனடியாக சீன எல்லையை மூட வேண்டும் என ஹாங்காங் நிர்வாகத்திற்கு கோரிக்கை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

ஹாங்காங்-சீனா இடையே உள்ள சாலை வழி மற்றும் கடல்வழி ஆகியவற்றை உடனடியாக மூடினால் மட்டுமே இந்த கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து ஹாங்காங் மக்களை பாதுகாக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் மருத்துவர்கள் மட்டுமன்றி நர்சுகளும் களத்தில் இறங்கி உள்ளதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஹாங்காங் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

author avatar
CineDesk