இல்லத்தரசிகளே உஷார்!!  ஒவ்வொரு முறையும் சிலிண்டர் வாங்கும் போது இதனை பார்த்து வாங்குங்கள்!!

0
27

இல்லத்தரசிகளே உஷார்!!  ஒவ்வொரு முறையும் சிலிண்டர் வாங்கும் போது இதனை பார்த்து வாங்குங்கள்!!

பெரும்பாலும் இந்த காலகட்டத்தில் சமையல் எரிவாயு விலை உச்சகட்டத்தில் உள்ளது. அது ஒரு புறம் இருக்க எரிவாயுவை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. மேலும் சமையல் எரிவாயு நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்தினர்களும் பயன்படுத்தி வருகிறார்கள் சமையல் எரிவாயு விலை உச்சகட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு சிலிண்டரிலும் A-13, B-11 என்ற எண் குறிக்கப்பட்டிருக்கும். இதனை பெரும்பாலும் காலாவதி தேதி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது காலாவதி தேதி அல்ல இருப்பினும் அதனை பார்த்து வாங்குவது மிகவும் நல்லது என்று கூறுகிறார்கள்.

பொதுவாக ஒரு சிலிண்டரை 15 வருடங்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் ஐந்து வருடங்களுக்கு ஒரு சிலிண்டரை சரி பார்த்து பின்பு தான் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்கள். அந்த சரிபார்ப்பு பணியில் பணியின் போது சிலிண்டருக்கு கொடுக்க வேண்டிய அழுத்தத்தை விட அதிக அழுத்தம் கொடுத்து டெஸ்ட் செய்வார்கள் அது போன்று டெஸ்ட் செய்த பின்னர் தான் அந்த பி 11 என்ற குறியீடு அந்த சிலிண்டரை குறிப்பிடுவார்கள். இதில் முன்னாடி வரும் ஆங்கில வார்த்தை மாதத்தை குறிக்கும் மற்றும் அந்த எண் வருடத்தை குறிக்கும்.

ஆனால் இந்த ஆங்கில வார்த்தை நான்கை மட்டும் தான் பயன்படுத்துவார்கள். அதில் A, B, C, D இவைகள் மட்டும் தான் இருக்கும்.

A- ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை குறிக்கும்.

B- ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை குறிக்கும்.

C- ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை குறிக்கும்.

D- அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குறிக்கும்.

அதன் பின் வருகின்ற என் அந்தந்த வருடத்தை குறிக்கும். இது போன்று சிலிண்டர்கள் வருவதை பார்த்து அந்த சமையல் எரிவாயு டெஸ்ட்க்கு சென்று வந்ததா இல்லை அப்படி செல்லவில்லை என்றால் அதனை குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் சிலிண்டர் வாங்கும் போது இதனை சரியாக உள்ளதா என்று சரி பார்த்து வாங்க வேண்டியது அவசியம் ஆகும்.  ஏனெனில் டெஸ்ட் செய்யாத சிலிண்டரை உபயோகப்படுத்தினால் ஏதேனும் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது இதனை தவிர்க்க அனைத்தையும்  சரியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

author avatar
Jeevitha