இறுதிப்போட்டியில் அபார வெற்றி… தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வென்ற லைகா கோவை கிங்ஸ்…

0
28

இறுதிப்போட்டியில் அபார வெற்றி!! தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வென்ற லைகா கோவை கிங்ஸ்!! 

நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அபார வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக டிஎன்பிஎல் தொடரின் கோப்பையை லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று(ஜூலை12) நடைபெற்ற டிஎன்பிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் சேர்த்தது.

லைகா கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் சுரேஷ் குமார் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 57 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய யு முகிலேஷ் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் அடித்து 51 ரன்கள சேர்த்தார். இறுதியாக களமிறங்கிய அதீக் உர் ரஹ்மான் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதனால் 20 ஓவர்களின்.முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது. நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் பந்துவீச்சில் சோனு யாதவ், வாரியர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மோகன் பிரசாத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

கோப்பையை கைப்பற்ற 206 ரன்கள் என்ற மெகா இலக்கை கொண்டு நெல்லை ராயல் கிங்ஸ் அணி களமிறங்கியது. நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் ஸ்ரீநிரஞ்சன் ரன் எதுவும் எடுக்காமலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜிதேஷ் குருசாமி 1 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

அதன் பின்னர் தொடக்க வீரர் அருண் கார்த்திக் அவர்களும் நித்திஷ் ராஜகோபால் இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாட தொடங்கினர். இருந்தும் லைகா கோவை கிங்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அருண் கார்த்திக் 27 ரன்களிலும்

நித்திஷ் ராஜகோபால் 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய சூரியப்பிரகாஷ் பொறுமையாக ஒரு புறம் விளையாடி ரன்களை சேர்க்க மறுபுறம் நெல்லை அணியின் .மற்ற பேட்ஸ்மேன்கள் கோவை அணியின் சுழல் பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதனால் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. கோவை கிங்ஸ் அணியில் ஜடவேத் சுப்ரமணியன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் ஷாரூக்கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனால் இறுதிப் போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று லைகா கோவை கிங்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக டிஎன்பிஎல் தொடரின் கோப்பையை கைப்பற்றியுள்ளது. சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடவேத் சுப்ரமணியன் ஆட்டநாயகன் விருதையும்தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட அஜிதேஷ் குருசாமி தொடர்நாயகன் விருதையும் வென்றனர்.