இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் ஆயுசுக்கும் மூட்டு முழங்கால் வலி வராது!!

0
219
#image_title

இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் ஆயுசுக்கும் மூட்டு முழங்கால் வலி வராது!!

இந்த காலகட்டத்தில் 30 வயதை கடந்து விட்டாலே பலருக்கும் மூட்டு மற்றும் முழங்கால் வலி வந்துவிடுகிறது. மேலும் திடீரென்று கீழே விழுந்து விட்டால் கூட சுலபமாக எலும்புகள் உடைந்து விடுகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் கால்சியம் குறைபாடு தான்.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்வது கட்டாயம். ஆனால் தற்பொழுதே வாழ்க்கை முறையில் முறையாக யாரும் அதனை எடுத்துக் கொள்வதில்லை.

அதன் பின் விளைவாக 30 வயது நெருங்கி விடுவதற்குள்ளேயே மருத்துவர் சந்தித்து கால்சியம் மாத்திரைகள் சாப்பிடும் நிலைமை வந்து விடுகிறது. இதனை தவிர்க்க வேண்டும் என்றால் இந்த பதிவில் வரும் குறிப்பை பின்பற்றி சாப்பிட்டால் போதும் ஆயுசுக்கும் கால்சியம் சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் வராது.

தேவையான பொருட்கள்:

வெள்ளை எள்

வெள்ளை எள்ளில் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது. மேலும் இதனை அதிக அளவு எடுத்துக் கொள்வதால் நமக்கு பி1 பி3 போன்ற சத்துக்கள் கிடைக்கிறது. அது மட்டுமின்றி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும்.

 

வெள்ளை எள்ளை சிறிது அளவு எடுத்துக் கொண்டு அதனை மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதனை தினந்தோறும் காலை நேரத்தில் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கலாம்.

இதற்கு மாறாக ஒரு ஸ்பூன் வெள்ளை எள் பொடியை சாப்பிட்டு விட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்தி கொள்ளலாம்.

இதனுடன் தினம்தோறும் 4 முதல் 5 ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலில் நல்ல மாற்றத்தை காண முடியும்.