இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கால்சியம் குறைபாடு தான்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

0
172

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கால்சியம் குறைபாடு தான்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

அன்றாடம் வாழ்க்கை முறை காரணமாக மாறிவரும் உணவு முறைகளால் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதனை நான் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களின் மூலமாக சரி செய்து கொள்ள முடியும் அதனை இந்த பதிவின் மூலமாக காணலாம். கால்சியமானது நம் உடலில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் பற்களின் உறுதிக்கும் மிகவும் அவசியமான சத்து கால்சியம் என நம் அனைவருக்கும் தெரியும்.

இது தவிர இருதயம் சீராக இயங்க தசை மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட கால்சியம் மிக அவசியமான சத்தாகும். பொதுவாக இந்த கால்சியம் குறைபாடு அதிகம் டீ, காபி குடிப்பவர்களுக்கும், தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கும், ஜீரண கோளாறினால் அவதிப்படக் கூடியவர்கள் கால்சியம் குறைபாடு ஏற்படுவதுண்டு.

மேலும் வயது முதிர்வு காரணமாகவும் கால்சியம் குறைபாடு ஏற்படும். ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக கால்சியம் குறைபாடு அதிகமாக இருக்கும் . கால்சியம் குறைபாடு அறிகுறிகளான கை கால் மற்றும் முதுகில் அதிக வலி உண்டாகும்.

முடி கொட்டுதல், தோல் வறண்டு இருப்பது அதிக உடல் சோர்வு மற்றும் தசை பிடிப்பு ஆகியவை கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதனை நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களின் மூலமாகவும் சரி செய்து கொள்ள முடியும்.

கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்பாலில் கால்சியம் மிக அதிகமாகவே உள்ளது 100 எம்எல் பாலில் 125 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் காலை மற்றும் மாலை இரு வேலைகளும் பால் எடுத்துக் கொள்வதன் மூலமாக கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது.

தயிர், மோர், வெண்ணை ஆகியவற்றை நாம் உணவுகளோடு அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான கால்சியம் சக்தி அதிக அளவில் உள்ளது. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் எடுக்கக் கூடிய எண்ணெய்களை அதிகம் உபயோகித்து வருவதன் மூலமாக கால்சியம் குறைபாடு குறைகிறது.

ஒரு நாளைக்கு இரண்டு வேலை முட்டை சாப்பிடுவதன் மூலமாக கால்சியத்தின் சக்தி அதிகரிக்கிறது. மீனிலும் கால்சியம் அளவு அதிகமாக உள்ளது. 100 கிராம் மீனில் 15 மில்லி கிராம் கால்சியம் உள்ளது அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளோடு மீன் சேர்த்து கொள்வதன் மூலமாக கால்சியம் குறைபாடு குறைகிறது.

 

author avatar
Parthipan K