இதில் ஏதாவது தவறு நடந்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் அதிரடி!

0
79

தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஆண்டுதோறும் தமிழக மக்கள் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். நாடு முழுவதும் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் இந்த பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களிடையே தனி மகிழ்ச்சி பொங்கி வழியும்.

ஏனென்றால் இந்த பொங்கல் விழாவின் போது தான் உழவுத் தொழிலை மதித்து உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள் மற்றும் சூரியன் உள்ளிட்டவைகளுக்கு தனி சிறப்பு மற்றும் மரியாதை வழங்கப்பட்டு அவர்களுக்கு பூஜைகள் நடத்தப்படும்.

அத்துடன் உறவினர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து ஓரிடத்தில் குழுமி தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். இவ்வாறான ஒரு நிகழ்வு தமிழகத்தில் மட்டுமே நடைபெறும்.

இந்த பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசின் சார்பாக பொங்கல் சிறப்பு பரிசு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில், நியாய விலை கடைகளில் பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, கடுகு, சீரகம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் இவற்றுடன் சேர்த்து ஒரு துணிப்பை உள்ளிட்டவை இலவசமாக தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஒரு சில பகுதிகளில் இந்தத் திட்டம் தொடங்கிய அன்றே சென்று பொருட்களை வாங்கியவர்களுக்கு துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டு அந்த துணிப்பைகளில் இந்த பொருட்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் சென்று இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குபவர்களுக்கு துணிப்பை இல்லை என்ற நிலை தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது.

இதனால் தமிழக மக்கள் பலரும் இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் இடம்பெறாமல் இருப்பது பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருப்பதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி ஆரம்பித்துவிட்டார் அதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார்.

அதனடிப்படையில் நியாயவிலை கடைகளில் பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம் மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லி தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், கிராம்பூ 100 கிராம், புளி 200 , கிராம், உளுத்தம் பருப்பு 100 கிராம், ரவை 1 கிலோ கோதுமை மாவு 1 கிலோ 500 கிராம் துணிப்பை 1 , ஒரு முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார்.

அதோடு இந்த பொருட்களை வழங்கும் போது ஒரு சில பகுதிகளில் சில பொருட்கள் உள்ளிட்டவற்றை விட்டு,விட்டு கொடுப்பதாக புகார்கள் வந்திருக்கின்றன. இதுபோன்ற புகார்களை தவிர்க்க அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொருட்களின் பட்டியலை வைத்திடவும், பொருள்கள் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இடம் அவர்கள் பெற்ற பொருளின் தொகுப்பில் அனைத்து பொருள்களும் இருக்கிறதா? என்று சரி பார்த்து கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறு செய்யாமல் ஒரு சில பகுதிகளில் அரசுக்கு அவதூறு ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும், செய்திகள் வெளிவருகின்றன. இப்படி தவறு செய்த சென்னை வடக்கு மண்டலத்தைச் சார்ந்த விற்பனையாளர் ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

பொருள்கள் விநியோகம் செய்வதில் இரவு பகலாக ஈடுபட்டு வரும் ரேஷன் கடை பணியாளர்கள் தவறு ஏற்படாமல் பொது மக்களுக்கு சிறப்பான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் ஏதேனும் தவறு நடந்தாலும், தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியிருக்கிறார்.

ஆகவே பொருளியல் தொகுப்பு விநியோகம் செய்வதில் ஈடுபட்டு இருக்கின்ற அனைத்து பணியாளர்களும், இந்த பணியை மேற்பார்வையிட அனைத்து அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து இந்த பணியினை எந்தவிதமான புகாருக்கும் இடமில்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு நேற்று வரையில் 43 லட்சத்து 85 ஆயிரத்து 111 அரசி அட்டைதாரர்களுக்கு பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெற்றிருக்கிறார்கள், வருகின்ற 10ஆம் தேதி வரையில் டோக்கன் அடிப்படையில் பொருட்கள் தொகுப்பு வாங்கிக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு காரணமாக, வருகின்ற 9ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற காரணத்தால் பொதுமக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் நாட்களில் வந்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாளில் பெற இயலாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக கடைக்குச் சென்று வாங்கிக்கொள்ளலாம். தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களால் பொருட்கள் தொகுப்பு பெற முடியாதவர்கள் இந்த மாத இறுதி வரையில் அதாவது 31ம் தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் கூறியிருக்கிறார் .